"அவரை" ஏன் இழுக்குறீங்க? டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்! ஓபிஎஸ் பேச்சால் கடுப்பான "மேலிடம்".. என்னாச்சு
சென்னை: நேற்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேசிய சில விஷயங்கள் டெல்லி பாஜக தரப்பை அதிருப்தி அடைய வைத்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு அதிமுகவில் நடக்கும் மோதலை "தற்காலிகமாக" பாஜக விரும்பவில்லை என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சம் பெற்றுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் எடப்பாடி வீட்டில் அடுத்தடுத்து நடந்து கொண்டு இருக்கின்றன.
இன்னொரு பக்கம் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வருவதை ஓபிஎஸ் சுத்தமாக விரும்பவில்லை. இதை நேற்று ஓ பன்னீர்செல்வமே தனது செய்தியாளர் சந்திப்பில், வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார்.

என்ன சொன்னார்?
அவர் தனது பேட்டியில், பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரிமையானது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது இப்படி ஒரு பிரச்சனை தேவையா? ஒற்றுமையாக இருக்க வேண்டும். நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றைத் தலைமை குறித்து யாரிடமும் பேசியதே இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த பொதுச்செயலாளர் மரியாதையை காலாவதியாக்கினால் அது ஜெ.வுக்கான துரோகம், என்று வெளிப்படையாக ஓபிஎஸ் பேசினார்.

மோடி பற்றி பேசினார்
அதோடு பிரதமர் மோடியையும் உள்ளே இழுத்து ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதில், தொண்டர்களை காப்பாற்றத்தான் அதிமுகவில் இருந்து வருகிறேன். கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டேன். துணை முதல்வருக்கு அரசியல் சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. இருந்தாலும், அழுத்தம் கொடுத்ததால் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன். நான் துணை முதல்வர் பதவி ஏற்க பிரதமர் மோடிதான் காரணம் என்று பிரதமர் மோடி பற்றியும் ஓபிஎஸ் பேசினார்.

ஓபிஎஸ் பேச்சு
இந்த நிலையில் ஓபிஎஸ் இப்படி மோடி பற்றி பேசியதை டெல்லி பாஜக விரும்பவில்லை என்கிறார்கள் பாஜக தரப்பினர். அதிமுக உள்ளே இரட்டை தலைமை - ஒற்றை தலைமை மோதல் நிலவுகிறது. இரண்டு தலைகளுக்கு இடையில் மோதல் நிலவுகிறது. அதில் ஏன் பாஜகவை இழுக்க வேண்டும். பழைய விஷயங்களை எல்லாம் ஏன் கிளற வேண்டும். ஏன் மோடியை எல்லாம் ஓபிஎஸ் இழுத்து பேச வேண்டும் என்று பாஜக டெல்லி தலைமை அப்செட்டில் இருக்கிறதாம்.

விமர்சனம்
நேற்று இந்த ஓபிஎஸ் பேட்டி வந்ததும் அதை திமுகவினர் கெட்டியாக பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்தனர். மோடி பிரதமர் வேலைக்கு இடையில் அதிமுகவில் மத்தியசம் பேசி இருக்கிறார் என்று கூறி திமுகவினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். ஓபிஎஸ் பேட்டி காரணமாக பிரதமர் மோடி மீது இப்படி விமர்சனங்கள் வைக்கப்படுவதை டெல்லி பாஜக வட்டாரங்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது போக இன்னொரு ரிப்போர்ட்டும் டெல்லிக்கு சென்றுள்ளதாம்.

டெல்லி ரிப்போர்ட்
அதன்படி அதிமுகவில் நடக்கும் மோதல் பற்றி டெல்லிக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு 30000 வாக்குகள் வரை குறைவாக உள்ளது. அதிமுகவிடம் இருக்கும் ஐந்து எம்பிக்கள், 66 எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் பாஜகவிற்கு இந்த நேரத்தில் முக்கியம். ஒரு எம்பியிடம் மட்டும் 700 வாக்குகள் உள்ளன. இந்த நேரத்தில் போய் அதிமுகவினர் உட்கட்சி பூசலால் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்காமல் போனால் சிக்கலாகும். 2 தலைவர்கள் அடித்துக்கொள்வதால் வாக்குகள் எதிர்க்கட்சிகள் பக்கம் செல்ல கூடாது. இதனால் பாஜக கொஞ்சம் இதில் தலையிட வேண்டும்.. டெல்லி தலைமை இதை கவனிக்க வேண்டும் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications