சூடான ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. அடக்கம் பற்றிய வாதத்தில் திடீரென கேட்ட "விஜயகாந்த்" பெயர்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை செய்யப்பட்டது.

தற்போது சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

armstrong bsp chennai high court

ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வழக்கு: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஏ. பொற்கொடி தனது கணவர் உடலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்த ரிட் மனு மீதான சிறப்பு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் இன்று தொடங்கினார்.

நீதிபதி: கட்சி அலுவலகம் இருந்த நிலத்தின் அருகில் ஏற்கனவே பெரிய கட்டுமானம் இருக்கிறது. அங்கே ஒரு கல்லறையை கட்டுவதற்கு கணிசமான நிலம் தேவைப்படலாம். நான் ஆம்ஸ்ட்ராங் ஒரு வழக்கறிஞராக இருந்ததிலிருந்து நீதிமன்ற வளாகத்தில் அவரைப் பார்த்து உள்ளேன். அந்த இடம் குடியிருப்பு இடமாக இருக்க கூடாது.

அரசு தரப்பு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன்: தனது இரங்கலைத் தெரிவித்து அதன்பின் தனது வாதத்தை தொடங்கினார். அவர்கள் ஆம்ஸ்ட்ராங்க் உடலை குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள 2,450 சதுர அடி நிலத்தில் அடக்கம் செய்ய விரும்புகின்றனர். அது குடியிருப்புகள் உள்ள நிலம். அந்த இடத்திற்கு பதில்.. கார்ப்பரேஷன் மூன்று இடங்களைக் கண்டறிந்துள்ளது, அவற்றில் ஒன்று அவர்களின் இடத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் மட்டுமே உள்ளது. கிட்டத்தட்ட 2,000 சதுர அடி கொடுக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் அவர்களை வேறு எதிலும் தடுக்கவில்லை.

நீதிபதி: கட்சி அலுவலகம் குடியிருப்பு பகுதியில் அமைந்திருப்பதால், வேறு ஏதேனும் மாற்று இடம் உள்ளதா என மனுதாரரின் வழக்கறிஞர்களிடம் நீதிபதி கேட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கோயம்பேட்டில் அடக்கம் செய்வதற்கும் இதேபோன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் வக்கீல் தெரிவித்துள்ளார்.
,
அரசுத் தரப்பு வழக்கறிஞர்: தேமுதிக அலுவலகம் 27000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல் 27,000 சதுர அடி பரப்பளவில் பெரிய நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வதற்கான மனுவை நிராகரித்து கிரேட்டர் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

நீதிபதி: நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10.30 மணிக்கு விசாரிக்கிறேன்

ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு : 12 மணிக்கு பதிலளிக்கிறோம்.

நீதிபதி: அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே?

ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா?

போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+