எடப்பாடிக்கு லீக் ஆன விஷயம்.. ஸ்டாலினை பார்த்தால் பயமாம்.. என்ன இவர் இப்படி சொல்றாரே.. உண்மையா?
சென்னை: முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி நேரடியாக விமர்சனம் செய்வது இல்லை, ஸ்டாலின் வழக்கு போட்டுவிடுவார் என்ற பயம் எடப்பாடிக்கு இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பேரணி காரணமாக சென்னையில் அண்ணா சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போக்குரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலில் 12க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேரணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், என்னதான் பேரணி சென்றாலும் ஸ்டாலினை எடப்பாடி நேரடியாக விமர்சனம் செய்வது இல்லை. மக்கள் கேட்கிறார்கள், மக்கள் கேட்கிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டு கேள்வி கேட்கிறார். ஆனால் அவர் ஸ்டாலினை நேரடியாக கேள்வி கேட்பது இல்லை.
காரணம் பயம். ஸ்டாலின் வழக்கு போட்டுவிடுவார் என்ற பயம் எடப்பாடிக்கு இருக்கிறது. கேஸ் போடுவார் என்ற பயத்தில் எடப்பாடி இருக்கிறார். அண்ணாமலை மீது போட்ட கேஸை பார்த்து எடப்பாடி பயந்துவிட்டார்.
எதிர்க்கட்சி தலைவராக அவர் தைரியமாக பேச வேண்டும். பொறுப்பான எதிர்க்கட்சி தலைவர் என்றால் பொறுப்பாக குற்றச்சாட்டு வைக்க வேண்டும் . ஆனால் எடப்பாடி வைக்கும் குற்றச்சாட்டு எதற்கும் ஆதாரம் இல்லை. அதை சரியாக எடப்பாடி வைப்பது இல்லை.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் அதிமுகவினர் மீது திமுக தரப்பு வலிமையான புகார்களை வைத்து உள்ளது. சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கையில் டெண்டர்களில் பெரிய முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஒரே கணினியில் இருந்து டெண்டர் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மின்சார துறை தொடங்கி பல துறைகளில் அடுத்தடுத்து ஊழல்களை செய்து உள்ளனர். இது போல திமுக மீது இவர்களால் ஏன் குற்றச்சாட்டு வைக்க முடியவில்லை. திமுக மீது ஏன் அதிமுக வலிமையான குற்றச்சாட்டு வைக்கவில்லை.
எடப்பாடி போய் ஆளுநரிடம் புகார் கொடுப்பதற்கு ஆதாரத்தோடு போய் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுங்கள். லஞ்ச ஒழிப்புத்துறைகிட்ட புகார் கொடுத்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கு தொடுக்கலாம்.
ஆளுநரிடம் புகார் அளித்து என்ன பயன்? அவர் இதனால்தான் பயப்படுகிறார் என்று கூறுகிறேன். பொறுப்பான எதிர்க்கட்சியாக எடப்பாடி செயல்படவில்லை. உண்மையான, வலிமையான குற்றச்சாட்டுகளை எடப்பாடி வைக்க வேண்டும், தைரியம் இருந்தால் எடப்பாடி சொல்ல வேண்டும்.
அதைவிட்டு மக்கள் சந்தேகிக்கிறார்கள்.. என்றெல்லாம் கூறி ஸ்டாலினுக்கு எதிராக புகார் வைக்கிறார். நீங்கள் புகார் வையுங்கள். என்ன மக்கள் சந்தேகிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஒரு எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி செயல்படவில்லை.
அவர் ஆளுநரை சந்திக்க சென்று பேரணி சென்றார். அந்த பேரணியே அன்பழகன், விஜயபாஸ்கர் மீது
பதியப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றிய செய்தியை மறைக்கவே செய்யப்பட்டது. ஆம் அந்த நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக எடப்பாடிக்கு முன்பே தகவல் சென்றுள்ளது.
யாரோ தகவலை லீக் செய்துள்ளனர். அதனால் சரியாக அப்போது எடப்பாடி பேரணி சென்று தகவலை திசை திருப்ப பார்த்து இருக்கிறார். ஆனால் எடப்பாடியால் அந்த விவகாரத்தை சரியாக திசை திருப்ப முடியவில்லை என்பதே நிஜம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications