"விடமாட்டேன்".. அண்ணாமலை - எடப்பாடி மோதல்? புதிய உச்சத்தை தொட்டுவிட்டதாமே.. நேற்று என்ன நடந்தது?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் புதிய உச்சத்தை தொட்டுவிட்டதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக இடையிலான மோதல் மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. டெல்லி பாஜகவோடு அதிமுக தலைவர்கள் நட்பாகவே உள்ளனர். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் அதிமுகவிற்கு அவ்வளவு சுமுகமான உறவு இல்லை.

யாத்திரைக்கு இடையே பேட்டி அளித்த அண்ணாமலை, ஓ பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. என்டிஏ கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன் .
கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
விமர்சனம்: அண்ணாமலையின் இந்த பேட்டியை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் பற்றி அண்ணாமலை இப்படி பேசி இருக்க கூடாது. அவர் எல்லை மீறிவிட்டார் என்ற கோபத்தில் இருக்கிறாராம். இதோடு அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்திடம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஜெயக்குமார் விமர்சனம்: அண்ணாமலையை விமர்சனம் செய்த ஜெயக்குமார், அதிமுகவினரை விமர்சிப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும், "அதிமுகவை 'தொட்டார் கெட்டார்' என்பது அண்ணாமலைக்கே தெரியும்; அதிமுகவின் தொண்டனையோ, தலைவரையோ விமர்சித்தால், எதிர்வினையை சந்திக்க நேரிடும்; அந்நிலைக்கு அவர் செல்லமாட்டார் என நம்புகிறோம்; அந்த நம்பிக்கையை அவர்தான் காப்பாற்ற வேண்டும், என்று ஜெயக்குமார் கூறி உள்ளார்.
செல்லூர் ராஜு: இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், மோடி ஜிக்கு எங்க தலைவரோட அருமை தெரியுது, அண்ணாமலைக்கு தெரியலனா நாங்க என்ன சொல்றது. அரசியல் கத்துக்குட்டிக்கு நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி எங்கள் மீது துரும்பை வீசினால் மீண்டும் நாங்கள் இரும்பை வீசுவோம், என்று செல்லூர் ராஜு விமர்சனம் வைத்துள்ளார்.
இதற்கு அண்ணாமலை அளித்த பதிலில், விஞ்ஞானி செல்லூர் ராஜு கெல்லாம் பதில் சொல்லி என்னோட தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை , என்று கூறி இருந்தார். இந்த நிலையில்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளார்.
எடப்பாடி கட்டுப்பாடு: அண்ணாமலையின் இந்த பேட்டியை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் பற்றி அண்ணாமலை இப்படி பேசி இருக்க கூடாது. அவர் எல்லை மீறிவிட்டார் என்ற கோபத்தில் இருக்கிறாராம். இதோடு அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்திடம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
அதாவது நடைப்பயணத்திற்கு இடையே அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்திற்கு போன் செய்து நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளாராம். இவர்கள் என்ன பேசினார்கள், ஏன் பேசினார்கள், ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவிற்கு வர போகிறாரா என்பது குறித்தெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த ஆலோசனை நடந்து இருக்கிறது.
இந்த தகவல் அரசல் புரசலாக கேட்டு எடப்பாடி பழனிசாமி கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.. இதன் காரணமாகவே இனிமேல் யாரும் அண்ணாமலை நடைப்பயணத்தை எட்டி கூட பார்க்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளாராம். அதாவது அண்ணாமலை உங்கள் ஏரியா பக்கம் வருவார். அப்போது அதிமுக நிர்வாகிகள் யாரும் அண்ணாமலையை பார்க்க செல்ல கூடாது . அண்ணாமலை நடத்துவது பாஜக யாத்திரை என்று எடப்பாடி கட்டுப்பாடு விதித்து இருக்கிறாராம்.
மீண்டும் தொடங்கிய யாத்திரை: இந்த நிலையில்தான் அண்ணாமலை யாத்திரை மீண்டும் தொடங்கி மதுரையில் நடந்து வருகிறது. இதற்கு இடையில் பாஜக மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
அதில், இனிவரும் காலங்களில் திமுக. அதிமுக கட்சிகள் கூட்டணியின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 17% சதவீத வாக்கு வங்கிகளை கடந்து செல்கின்ற பாஜகவுடன் போட்டியிட தயாரா? நாங்கள் தேர்தல் களத்தில் பணிபுரிபவர்கள். உங்களுடைய பலமும், பலவீனமும் எங்களுக்கு தெரியும். ஆளும்கட்சி செய்கின்ற ஊழல்களை கண்டறிந்து DMK File 1 & DMK File 2 என்று நடவடிக்கை எடுத்து ஊழல் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பிய எங்களுக்கு ஆண்ட அதிமுகவின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தேடி எடுத்து எங்களுடைய தலைமைக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும் என்று கருதுகிறீர்கள். மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம், என்று கூறி இருந்தார்.
கோபம்: இந்த பாஜக மதுரை மாநகர் தலைவர் மகா.சுசீந்திரன் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கம் ஆவார். அண்ணாமலை அனுமதி இன்றி இவர் பேசி இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாஜக மீது எடப்பாடி கோபமாக இருக்கிறாராம். கூட்டணியில் இருக்கும் நம்மையே மிரட்டுகிறார்களா.. அவர்களை விட மாட்டேன் என்ற கொதிப்பில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications