நாம் தமிழர், விசிக, விஜய்.. எடப்பாடி ஒரு கட்சி விடாமல் கூட்டணிக்கு அழைப்பது ஏன்? என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். அவரின் இந்த செயல் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
1. முன்னதாக சிதம்பரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

2. இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்தன.
3. தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும்.
4. விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும்.
5. எங்களது பொதுவான கருத்து என்னவென்றால், இந்த கட்சி அந்தக் கட்சி என்றில்லை, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்.
6. எடப்பாடி இப்படி அழைப்பதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு போதிய பலம் இப்போது இல்லை என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதிமுக கூட்டணி வெற்றிக்கூட்டணி இல்லை.
7. அதிலும் இப்போது அந்த கூட்டணியில் தேமுதிக இல்லை. பாமக இல்லை. பாமக விஜய் பக்கம் போனாலும் வியப்பு இல்லை. இப்படி இருக்க பழைய வாக்கு வங்கியை தக்க வைப்பதே வியப்பான விஷயமதான் . அதுவே கடினமான விஷயம்தான். இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார்.
8. ஆனால் இதற்கு விசிக திருமாவளவன் அளித்த பதிலில், அதிமுக - பாஜகவின் பழைய கூட்டணியில் இருந்த கட்சிகளே மீண்டும் அவர்களுடன் சேரவிலையே. பாமக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. தேமுதிக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் புதிய புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றெல்லாம் சொன்னீர்களே.. இப்போது என்ன ஆகிவிட்டது? ஏன் கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய முடியாமல் போய்விட்டது? ஏன் உங்கள் கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளே உங்களுடன் சேர மறுத்து வருகிறார்கள். திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளை இப்போது அழைக்கிறீர்கள், என்று பலரும் எடப்பாடி அழைப்பை நிராகரித்து உள்ளனர்.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications