மிஸ்ஸாயிடுச்சே.. டிடிவி கரெக்ட்டா சொல்றாரு.. "பிரித்து மேயுங்கள்".. எடப்பாடி பெயரை காணோமே: லட்சுமணன்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து பத்திரிகையாளர் லட்சுமணன் நம் ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி பெயரை காணோமே ஏன்? விசாரணை கமிஷனை புதிதாக நியமித்து, ஆறுமுகசாமி ஆணையத்தை பிரித்து மேயவேண்டியது தமிழக அரசின் கடமை என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இவர்கள் 4 பேருக்கு மட்டும் ஏன் தொடர்பு? ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோர் பெயர் அறிக்கையில் இல்லையே? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனும் நம் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கேள்விகளை எழுப்பி உள்ளார்.. லட்சுமணன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

டைப்பிங் மிஸ்டேக்
"தான் பொறுப்பேற்றதாக ஒரு தேதியை ஆறுமுகசாமி குறிப்பிட்டுள்ளார்.. அந்த தேதியே தவறுதான்.. ஆணையம் அமைக்க அரசாணை வெளியிடும் முன்பாகவே பதவியேற்றார்.. தட்டச்சு பிழையாக இருக்கலாம்.. ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.. கவனம் தவறியதற்கு முதல் உதாரணமே இதுதான். வழக்கை ஆரம்பித்தது, விசாரித்தது, என்று ஓரிரு இடங்களில் தேதிகளும் மிஸ் ஆகி உள்ளது.. இதுபோன்ற ஆணையங்களை அரசு அமைக்க வேண்டிய நோக்கம் என்ன? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா? என்பது.. ஆனால், மர்மம் என்ற வார்த்தைகூட அறிக்கையில் இல்லை.

பெரிய மர்மம்
சிகிச்சையில் என்ன நடந்தது? அப்பல்லோவில் மரணம் வரை நடந்த நிகழ்வுகளை ஆராயும்படிதான் சொன்னார்கள்.. மர்மம் இருக்கிறதா? அப்படியே மர்மம் இருந்தாலும் அதற்கு யார் காரணம்? இதெல்லாம் அரசாணையில் இல்லை.. அதேசமயம், மர்மம் இருந்தாலும், அதை யாரையாவது குற்றம் சாட்டியே ஆகவேண்டும் என்றும் அரசு கேட்கவேயில்லை.. அதுவும் சசிகலா தன்னுடைய எதிரியாக சித்தரித்துக் கொண்ட, எடப்பாடி தலைமையிலான அரசுகூட அதை கேட்கவில்லை.. சசிகலா என்ற வார்த்தையைகூட அவர்கள் சொல்லவில்லை.

ப்ரூப் எங்கே
ஒருவேளை விசாரித்து பார்த்துவிட்டு, ஆதாரம் இருந்தால், இவர்கள் குற்றம் செய்ததாக நான் கருதுகிறேன் என்றுதான் ஆறுமுகசாமி கமிஷன் சொல்ல முடியும்.. குற்றஞ்சாட்ட முடியாது.. ஆதாரம் இல்லை என்றால், இதில் எந்த மர்மமும் இல்லை என்று தாராளமாக சொல்லிவிட்டு போயிருக்கலாம்.. ஆனால், யாரையும் குற்றம்சாட்டாவிட்டால், தன்னை ஏதோ செய்துவிடுவார்களோ, கொடுத்த சம்பளத்தை திரும்ப வாங்கி கொள்வார்களோ? என்று பயந்துகொண்டு இப்படி ஆதாரமே இல்லாமல், இவராகவே வலிய வந்து குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு போயுள்ளது தவறு.

சந்தேக பார்வை
2012-க்கு பிறகு ஜெயலலிதா - சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என்கிறது ஆணைய அறிக்கை.. சசிகலா மீது குற்ற நடவடிக்கையை தொடர வேண்டும் என்று சொல்லும் ஆணையம், அப்படியானால், சசிகலாவை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை? பிரமாணப்பத்திரிரகை தாக்கல் செய்திருந்தபோதிலும், சந்தேகப்பார்வை உங்கள் மீது விழுவதால், ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கு முன்பு நீங்கள் ஆணையத்தில் ஆஜராவது அவசியம் ஆணையம் சசிகலாவுக்கு ஒரே ஒரு கடிதமாவது அனுப்பியதா? ஏன் கூப்பிடவில்லை? ரிச்சர்ட் பீலேவையும் கூப்பிட மறுக்கிறாரே ஏன்? கேட்டால் ஃபிளைட் சார்ஜ் அதிகமாகிறது என்கிறார். அதை பற்றி இவருக்கு என்ன கவலை?

உறவு முறிவு
மயங்கி விழுந்த அன்று, அந்த நிமிடம் தொடங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 25 நிமிடம் வரை, வேகத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள்.. அங்கே சசிகலா உட்பட யாரும் எதையும் இயற்கைக்கு மாறாக, சந்தேகப்படும்படியாக எந்த செயல்களும் நடக்கவில்லை என்று முதல் தீர்ப்பையும் தந்துவிடுகிறார் ஆறுமுகசாமி.. அப்படியானால் ஜெ.சசி இவர்களுக்குள் உறவு சரியில்லை என்றாலும்கூட, ஜெயலலிதாவை தாக்கினார்கள், விஷம் வைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று சிலர் குற்றஞ்சாட்டினாலும், அதையெல்லாம் நிராகரிப்பதாக தீர்ப்பில் சொல்லி உள்ளார் ஆறுமுகசாமி.

தகரும் யூகங்கள்
அப்படி இருந்தும்கூட, வேறு வழியேயில்லாமல், முன்யோசனையில்லாமல் ஆதாரமில்லாமல் ஓபிஎஸ், விஜயபாஸ்கர் உட்படஅவர்கள் மீதெல்லாம் குற்றம் சொல்லி உள்ளார்... தாராளமாக குற்றம் சொல்லட்டும், ஆனால், இந்த சாட்சி இப்படி சொன்னதால்தான் விஜயபாஸ்கர் குற்றவாளி என்று ஏன் சொல்லவில்லை? ஒருவரிகூட எந்த சாட்சியத்தையும் ஆதாரமாக இழுக்கவில்லை.. அத்தனையையும் யூகமாகவே முன்வைக்கிறார்.. அரசியலமைப்பு சட்டம், சட்டநுணுக்கம் சில உள்ளது.. அதன்படி, வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படக்கூடிய ஒரு சூழல் வந்தால், மத்திய அரசு உரிய உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியதுதானே?

இந்திரா காந்தி
ஏன் இப்படி ஒரு தீர்மானம் போடவில்லை என்று ஒட்டுமொத்த அமைச்சர்கள் மீதுதான் ஆறுமுகசாமி குற்றம் சாட்ட வேண்டுமே தவிர, தனிப்பட்ட விஜயபாஸ்கரையோ, தனிப்பட்ட ஓபிஎஸ்ஸையோ குற்றஞ்சாட்ட முடியாது.. எம்ஜிஆர் இருந்தபோதும், இப்படித்தான் தன்னிச்சையாக வந்து பிரதமர் இந்திரா சில வசதிகளை செய்து தர தயாராக இருந்தாரோ, அதுபோல மத்திய அரசும் இதுபோல் சில ஏற்பாடுகளை செய்திருக்கலாம் என்று பரிந்துரையாக ஆறுமுகசாமி சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு பார்ட்டே இந்த அறிக்கையில் இல்லை.

டிடிவி தினகரன்
வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று சொன்ன அதே ரிச்சல்ட் பீலே, ஏர்விமானத்தில் அழைத்து செல்வதற்கான உடல்நலம் தற்போது இல்லை என்றும் பதிவு செய்துள்ளார்.. இது எதையுமே கண்டுகொள்ளாமல், ஜெ.வை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதை தடுத்தது யார்? என்றும் ஆறுமுகசாமி குறிப்பிட்டு சொல்லவேயில்லை.. வெளிநாடு செல்வதை விஜயபாஸ்கர் தடுத்தாரா? ராதாகிருஷ்ணன் தடுத்தாரா? சசிகலா தடுத்தாரா? எதையாவது சொல்லணும் இல்லை? அத்தனையையும் யூகமாகவே சொல்லி உள்ளதால்தான், டிடிவி தினகரன் சிபிஐ விசாரணை கேட்கிறார்.. அதில் 100 சதவிகிதம் நியாயம் இருக்கிறது. தினகரன் மட்டுமல்ல, அத்தனை அரசியல் கட்சிகளும் இந்த சிபிஐ விசாரணையை கேட்க வேண்டும்.. யாருக்கு வேண்டுமானாலும் நாளை இப்படி நிகழலாம்.

Doctor பாபு
ஓபிஎஸ் பெயர் மட்டுமில்லை, எடப்பாடி பழனிசாமி பற்றியும் ஆறுமுகசாமி துளி கூட கவலைப்படவில்லை.. ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்குவதால்தான், சசிகலா, ராதாகிருஷ்ணன், டாக்டர் பாபு உட்பட எல்லாரையும் லிஸ்ட்டில் கொண்டு வருகிறார்கள்.. ஜெயலலிதாவை மரணமடைந்தால் யாருக்கு பலன் என்றால், அரசியல் ரீதியாக திமுக, பாஜக பலன் அடைவார்கள்.. அடுத்ததாக, ஜெயலலிதாவின் பதவியை அடைபவர்கள் பலன் பெறுவார்கள்.. அந்தவகையில் சசிகலா பெயர் அடிபட்டது. அவரும் சிறைக்கு சென்றுவிட்டார்.. அடுத்து ஓபிஎஸ் பெயர் அடிபட்டது.. 2 மாதத்தில் அவரும் விலகிவிட்டார்.. அப்படியானால் நாலரை ஆண்டுகள் ஜெயலலிதா வகிக்க வேண்டிய பதவியை வகித்தவர் யார்?

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிசாமிதானே.. எப்படி அந்த சூழல் நடந்தது? முதல்வர் பதவியை வகிக்க, தன்னை தயார்படுத்திக் கொண்டு ஓபிஎஸ் ரெடியாக இருந்தார் என்று கருத்து சொல்கிற ஆறுமுகசாமி, எடப்பாடி இருக்கும் திசை பற்றி கூட கவலைப்படவில்லை.. இதன் பின்னணி என்ன என்ற கேள்வி பொதுவெளியில் தற்போது எழுந்துள்ளது.. இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகள் உள்ளன.. இந்த பின்னணியைதான் ஆராய வேண்டும்.. அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்று கமிஷன் அமைக்க நேர்ந்தால், நீதிபதிகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள்.. இந்த கமிஷனுக்காக நாலரை கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.. அதனால், ஆறுமுகசாமி ஆணையம் குறித்து தமிழக அரசே விசாரணை கமிஷனை வைக்கலாம்.. ஆறுமுகசாமி ஆணையத்தை பிரித்து மேயவேண்டியது தமிழக அரசின் கடமையும்கூட என்று தெரிவித்துள்ளார்.
-
லாஸ்ட்டில் ராமதாஸ் "இவருடன்" கூட்டணியா? வடக்கையும் தெற்கையும் அதிரவைக்கும் அரசியல்வாதி யார்? -
கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம் -
தைலாபுரத்தில் சசிகலாவுக்கு கமகம விருந்து.. கூட்டணி உறுதியானதால் ராமதாஸ் ஏற்பாடு -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க












Click it and Unblock the Notifications