சின்ன நாடு உக்ரைன் கூட கேள்வி கேட்டுச்சே.. இந்தியாவிற்கு என்ன ஆச்சு? டிரம்ப் வார்னிங்.. மோடி பதில்?
சென்னை: இந்தியாவிற்கு எதிராக பரஸ்பர "பதிலடி" வரி.. அதாவது reciprocal வரியை விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்து உள்ளார்.
Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரி இந்தியா பாதிப்பு
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா , தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா, தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.
இந்தியா பதிலடி இல்லை
இந்தியாவிற்கு எதிராக பரஸ்பர "பதிலடி" வரி.. அதாவது reciprocal வரியை விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 2ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்து உள்ளார்.
ஆனால் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை. இதுவரை இந்தியா எந்த விதமான எதிர் கருத்தும் சொல்லவில்லை. சில அமெரிக்கா பொருட்களுக்கு இந்த வரியை குறைத்தது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
போர்பன் விஸ்கியின் அடிப்படை சுங்க வரி இப்போது 50% ஆகவும், கூடுதலாக 50% வரியுடன் மொத்தம் 100% ஆகவும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு, இந்த இறக்குமதிகளுக்கு 150% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதுபான பொருட்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றிற்கு தொடர்ந்து 150% வரி விதிக்கப்படும்.ஆனால் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை.
சின்ன நாடுகள் எல்லாம் கேள்வி கேட்டதே
டிரம்பிற்கு எதிராக சின்ன நாடுகள் கூட கேள்வி கேட்டு வருகின்றன. கனடா டிரம்பிற்கு பதிலடி தந்தது. அதோடு 24 மணி நேரத்தில் டிரம்ப் வரிக்கு பதிலடியாக கூடுதல் வரி விதித்தது. அண்டை நாடு சீனா கூட பதிலடி வரிகளை விதித்தது. இன்னொரு பக்கம் உக்ரைன் டிரம்ப் உடன் நேருக்கு நேர் மோதியது.
வெள்ளை மாளிகையில் வைத்தே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டிரம்ப்பை விமர்சனம் செய்தார். ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை பதிலடி தரவில்லை. மோடி எதுவும் பேசவில்லை. இந்தியா எந்த விதமான துணிச்சலான கருத்துக்களையும் பேசாமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications