சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே.. சேப்பாக்கத்தில் பேட்டை முறுக்கிய ஜடேஜா.. அப்படியே திரும்பினா தோனி.. ஆ
சென்னை: இன்று குஜராத் அணிக்கு எதிராக ஐபிஎல் 2023 குவாலிபயர் ஆட்டம் நடக்க உள்ள நிலையில் ஜடேஜா நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்.
சிஎஸ்கே அணிக்கு 2023 ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம்.ப்ளே ஆப் ஆட்டங்களுக்கு போராடி வந்த சிஎஸ்கே அணி இன்று குஜராத் அணியை 2023 குவாலிபயர் சுற்றில் எதிர்கொள்ள இருக்கிறது.

இன்று வெற்றிபெற்றால் சிஎஸ்கே அணி நேரடியாக ஐபிஎல் 2023 பைனல்ஸ் போட்டிக்கு செல்லும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜடேஜா நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்.
அவர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். சிக்ஸர், பவுண்டரி என்று அதிரடியாக அடித்து பயிற்சி மேற்கொண்டார்.
அப்படியே திரும்பி பார்த்தால் அருகிலேயே தோனியும் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். பயிற்சிக்கு இடையே அவ்வப்போது அணி வியூகங்கள் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்தனர்.
இவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது.. இனி ஜடேஜா சிஎஸ்கேவிற்கு ஆட மாட்டார் என்றெல்லாம் வந்த செய்திகளை சல்லி சல்லியாக உடைக்கும் விதமாக நேற்று நடந்த பயிற்சியில் ஜடேஜா - தோனி நெருக்கமாக இருந்தனர்.
என்ன நடந்தது?
2023 ஐபிஎல் சீசனில் ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்தாலும் இதற்கு முந்தைய போட்டிகளில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முக்கியமாக பேட்டிங்கில் விருப்பமே இல்லை என்பது போல அவர் ஆடி வருகிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் அவரின் கேப்டன்சி பறிக்கப்பட்ட காரணத்தால் அவர் அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்த சீசனில் அவர் சிஎஸ்கேவில் ஆடும் விருப்பத்திலேயே இல்லை. தோனி அவரிடம் பேசி சமாதானம் செய்த காரணத்தினாலேயே அவர் மீண்டும் அணிக்குள் வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த டெல்லி போட்டிக்கு பின்.. தோனி பேசுகையில்.. தனது தனிப்பட்ட ரெக்கார்டுக்காக ஆடும் வீரர்கள் தேவை இல்லை. இந்த அணிக்காக ஆடும் வீரர்களே தேவை என்று கூறினார்.
அவர் ஜடேஜாவை குத்திக்காட்டி இப்படி பேசியதாக கூறப்பட்டது.
டெல்லி போட்டியில் வென்றதற்கு பின் ஜடேஜா - தோனி இடையே விவாதம் நடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி முடிந்த பின் ஜடேஜா தோளில் கையை போட்டு தோனி ஏதோ சொன்னார். உடனே ஜடேஜா பதிலுக்கு ஏதோ சொல்ல.. இரண்டு பேரும் காரசாரமாக விவாதம் செய்தனர். இந்த விவாதம் முற்றவே தோனி முகத்தை சுருக்கிக்கொண்டு கோபமாக பேசினார்.
அவர் இப்படி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தோனி - ஜடேஜா இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக சொல்லப்படும் நிலையில்தான் ஜடேஜா - தோனி இடையே நேற்று மோதல் ஏற்பட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.
பதிலடி:
இதையடுத்து ஜடேஜா செய்த போஸ்ட் ஒன்றில்.. கர்மா உன்னை கண்டிப்பாக தண்டிக்கும். இப்போது இல்லை என்றாலும் பின்பாவது உன்னை கண்டிப்பாக தண்டிக்கும் என்று கூறி உள்ளார்.
அதில் ஜடேஜா.. definitely என்ற வார்த்தையை வேறு பயன்படுத்தி உள்ளார். கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் தோனி ஓய்வு பெறுவீர்களாக என்ற கேள்விக்கு definitely not என்று கூறினார்.
அந்த வார்த்தையை இப்போது ஜடேஜா பயன்படுத்தி உள்ளதால், தோனிக்குதான் இந்த பதிலடியோ என்று எண்ண தோன்றுகிறது. இந்த போஸ்டை ஜடேஜா மனைவியும் ஷேர் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications