ஸ்டாலின் மாதிரி இங்கே யாரும் இல்லையே..ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு.. கன்னட மக்கள் வைத்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுவதை கன்னட மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில்.. கன்னட மக்கள் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

MK Stalin

தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கண்டனத்தில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!

MK Stalin

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செய்ய நினைத்தால் விட மாட்டோம். மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை கையெழுத்து போட மாட்டோம். #NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான #SamagraShiksha நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?

MK Stalin

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா? இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin

கன்னட மக்கள் டிரெண்ட்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுவதை கன்னட மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில்.. கன்னட மக்கள் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பொறாமை.. நம்ம கன்னடிக மக்களுக்கு இதே தெளிவு 10% ஆவது இருக்கணும். இங்கே உள்ளவர்கள் ஸ்டாலின் போல இப்படி பேசுவது இல்லை, என்றுள்ளார்.

MK Stalin

இன்னொருவர் நார்மல் speechக்கே சில்லரைய செதற விடுறானுக. இப்ப தான் வாழ்க்கையில முதுகெழும்போட எதிர்த்து பேசுறவங்கள பாத்திருப்பானுக போல!

Good start. நெருப்ப கக்குங்க.. தமிழ் அல்லது கன்னடத்தை மூன்றாம் மொழியாகக் கற்பித்த வட இந்திய அரசுப் பள்ளியைச் சொல்லுங்கள். அப்படி எதுவுமே இல்லை. தமிழக முதல்வரின் நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியது.

MK Stalin

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில முதல்வரும் கூட்டாட்சிக்காக போராட வேண்டும். கன்னடம், தமிழ், வங்காளம் போன்ற நாகரீகங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. டெல்லியில் உள்ள சில கொடுங்கோலர்கள் எங்களுக்கு நிபந்தனைகளை விதிக்க முடியாது, என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MK Stalin
MK Stalin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+