டிரோனை விட்ட பாகிஸ்தானின்.. முதுகெலும்பை உடைத்த இந்தியா.. ஒரு நொடி கூட தாமதிக்கலையே!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பாகிஸ்தான் நடத்த முயன்று இருக்கும் தாக்குதல் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது. பாகிஸ்தான் கைவைக்க கூடாத இடத்தில் கைவைத்து விட்டது. இந்த தாக்குதல் ஏன் சாதாரண விஷயம் கிடையாது.. இதை ஏன் இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது .. அதற்கு உதாரணமாக தற்போது பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் இப்போது தாக்குவது எல்லாம் பொதுமக்கள் உள்ள இடங்கள். அல்லது ராணுவ தளவாடங்கள். விமான நிலையம் போன்ற பொது இடங்கள்.
இந்தியா தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது.அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை.
இப்போது பாகிஸ்தான் திருப்பி அடிக்கிறது.. இந்தியாவில் பாகிஸ்தான் எங்கே தாக்க வேண்டும்? இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது. தாக்கினால் அது போர் ஆக மாறும். இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை. அதனால் பாகிஸ்தானும் இந்திய ராணுவ தளவாடங்களை தாக்க முடியாது.
சரி.. நாம் தாக்கியது போல தீவிரவாத தளவாடங்களை தாக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவில் அப்படி கேம்ப் எதுவுமே இல்லை. காஷ்மீரில் உள்ள ஒரு சில தீவிரவாத கேம்ப் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவானது. இப்போது பாகிஸ்தான் நினைத்தால் கூட எங்கே தாக்குவது என்ற முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால் அதை மீறி பாகிஸ்தான் சிவிலியன் இடங்களை தாக்கி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளங்களில் மட்டுமே இந்தியா தாக்கியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பாகிஸ்தான் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை தாக்கி உள்ளது. இதுதான் act of war என்பார்கள்.
அதாவது போரை தூண்டும் செயல். போர் செயல். பாகிஸ்தான் செய்திருப்பது போரின் தொடக்கம்தான். இதற்கு கண்டிப்பாக இனி இந்தியா கடுமையான பதிலடியை தரும். நினைத்து பார்க்க முடியாத மிக மோசமான பதிலடியை தரும். ஏனென்றால் பாகிஸ்தான் தொட்டது இந்திய பொதுமக்களை. இந்திய மக்களை வீழ்த்த முயன்றதை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்வது. இது பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்யும் செயல் அல்ல.. அந்நாட்டு அரசின் ராணுவம் செய்யும் செயல்.
எனவே இனி இது இந்திய ராணுவம் vs தீவிரவாதம் இடையிலான மோதல் இல்லை. இந்திய ராணுவம் vs பாகிஸ்தான் ராணுவம் இடையிலான மோதல். அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்போது பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்து உள்ளது. பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications