அவர் வரட்டும்.. எல்லாத்தையும் சொல்லலாம்.. தமிழ்நாட்டில் கால் பதிக்கும் மோடி.. பதற போகும் "தலை".. ஆஆ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சென்னை வருகிறார். கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதேபோல் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவும் பிரதமர் மோடி செல்ல இருக்கிறார்.

Why is PM Modi visiting Tamil Nadu suddenly and What is the plan of BJP cadres?

அன்று மாலையே பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். அதோடு தனியார் நிகழ்ச்சி ஒன்றிலும் பிரதமர் மோடி பேச உள்ளார். இந்த நிகழ்வுகளுக்கு இடையில் பிரதமர் மோடி சென்னையில் உறங்கிவிட்டு மறுநாள் முதுமலை சரணாலயம் செல்ல இருக்கிறார்.

இதில் தமிழ்நாட்டில் அவர் தங்கும் 8ம்தேதி இரவு, சென்னை விமான நிலையத்தில் வரும் 8ம் தேதி பிற்பகல், பின்னர் 9ம் தேதி பிற்பகல் ஆகிய மூன்று நேரங்களில் அவர் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

அதன்படி பாஜக தலைவர் அண்ணாமலையை மோடி சந்திக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அண்ணாமலை சார்பாக அவர் மோடியை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மோடி வருகையின் போது வரவேற்பதற்காக அண்ணாமலை வர வாய்ப்புகள் உள்ளன. அதை தொடர்ந்து இரவு நடக்கும் மீட்டிங்கில் அண்ணாமலை மோடியை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாடு பாஜக கூட்டணி, தமிழ்நாடு பாஜக பிரச்சனை உள்ளிட்ட பல விஷயங்களை அண்ணாமலை பேசுவார் என்று கூறப்படுகிறது.

பொதுவாக மோடி தமிழ்நாடு வந்தால் பாஜக நிர்வாகிகள் சிலரை அழைப்பார். அவர்களிடம் தனியாக அரசியல் தாண்டி குடும்ப விவகாரங்கள், பர்சனல் விஷயங்களை பேசுவார். அப்படித்தான் 8ம் தேதி இரவு பாஜக நிர்வாகிகளுடன் இவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அண்ணாமலைக்கு எதிராக இருக்கும் ஒரு பாஜக குழு மோடியை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மோடியை பார்த்து அண்ணாமலைக்கு எதிராக இவர்கள் புகார் வைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மோடிக்கு வருகிறார்.. அவர் வரட்டும்.. அவரிடம் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் சொல்லுவோம் என்று பாஜகவில் ஒரு குழு தயாராக இருக்கிறதாம்.

மோடி வருகையால்.. பாஜக வட்டாரத்தில் கொஞ்சம் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறதாம். கட்சியில் உட்கட்சி பிரச்சனை உச்சத்தில் உள்ள நிலையில் மோடி வருகையின் போது அதை மோடியிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று சிலர் திட்டத்தில் இருக்கிறார்களாம். இதை அறிந்த வேறு சிலரோ.. கொஞ்சம் பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக சந்திப்பு

Why is PM Modi visiting Tamil Nadu suddenly and What is the plan of BJP cadres?

இது ஒரு பக்கம் இருக்க திமுக சார்பாகவும் பிரதமர் மோடியை ஒரு குழு சந்தித்து பல்வேறு திட்டங்கள் தொடர்பான அப்டேட்களை கேட்க உள்ளனர். முக்கியமாக ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தேசிய அளவில் சட்டம் கொண்டு வருவது, ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது, நீட் விவகாரம் குறித்து பேசுவது என்று பல்வேறு விஷயங்களை திமுக குழு பிரதமர் மோடியை சந்தித்து வைக்க இருக்கிறதாம்.

அதிமுக

Why is PM Modi visiting Tamil Nadu suddenly and What is the plan of BJP cadres?

அதே போல் அதிமுக சார்பாக இப்போதைக்கு ஓ பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்க அனுமதி கேட்டு இருக்கிறாராம். அவருக்கு இன்னும் மோடியை சந்திக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. எடப்பாடி சார்பாக அதிமுக என்ற பெயரிலும் அனுமதி கேட்கப்பட்டு இருக்கிறதாம். அவருக்கும் இன்னும் நேரம் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+