இன்ஸ்ட்டா பிரபலம் பியூமியை நினைவிருக்கா? மொத்த இலங்கை நாட்டையே உலுக்கிட்டாரே.. அதிர வைத்த அழகி
சென்னை: இலங்கையிலும், இந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் மாடல் அழகி பியூமி ஹன்சாமலி அந்நாட்டையே உலுக்கி உள்ளார். தற்போது அந்நாட்டு அரசாங்கத்தால் பியூமி விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
பியூமி இணையத்தில் மிகவும் பிரபலம். இவரின் மாடலிங் சூட் காரணமாக இவர் பெரிய அளவில் கவனம் பெற்றார். கணவனை பிரிந்து மகனுடன் வாழும் இவர்.. தனது மகனுடன் எடுத்த போட்டோ ஷூட்டுகள் காரணமாக கடுமையான விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் கூட உள்ளானர்.

மிகவும் ஆபாசமாக போட்டோ எடுப்பது, வீடியோக்களை வெளியிடுவது இவரின் வழக்கம். இவரின் இணைய பக்கங்கள் மிக பிரபலம். இந்த நிலையில்தான் இவரின் சொத்து மதிப்பும் தற்போது இணையத்தை, இலங்கையை உலுக்கி உள்ளது.
இலங்கையில் Magen Ratata Organisation என்ற நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் மோசடிகள், ஊழல்களை கண்டறியும் நிறுவனம் ஆகும். ஊழல்கள், பண மோசடி செய்பவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை இந்த நிறுவனம் பதிவு செய்வது வழக்கம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனம் தற்போது பியூமி மீது புகார் அளித்துள்ளது.
Magen Ratata அமைப்பினால் பியூமிகு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கொடுத்த ஆதாரத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் மற்றும் உடமைகளை, நிறுவனங்களை சிஐடி போலீசார் விசாரணை செய்ய தொடங்கி உள்ளனர்.
இவருக்கு பல லட்சம் கோடி சொத்துக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 19 வங்கி கணக்குகள் இவரிடம் உள்ளன.
organised குற்றங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் கணிசமான சொத்துக்களை அவர் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டை அடுத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள எட்டு முக்கிய வங்கிகளில் 19 கணக்குகளை மாடல் பராமரித்து வருவதாக அந்நாட்டு சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கணக்குகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, ரேஞ்ச் ரோவர் ஒன்றை ரூ. 78 மில்லியனுக்கு இவர் சமீபத்தில் வாங்கினார். ராஜபக்சே குடும்பத்திடம் இருந்து அவர் வாங்கிய கார் இது. இந்த கார்தான் தற்போது இந்த புகாருக்கும் விசாரணைக்கும் காரணமாக மாறி உள்ளது.
அந்த காரை வாங்கும் அளவிற்கு இவரிடம் பணம் எது என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சொகுசு குடியிருப்பு இவருக்கு சொந்தமாக உள்ளது. கொழும்பில் உள்ள சொத்துக்கள் மட்டும் 148 மில்லியன் இலங்கை ரூபாயை தாண்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாவில் போட்டோ போடும் மாடல் அழகிக்கு எப்படி இவ்வளவு பணம்.. எப்படி இவ்வளவு பணத்தை அவர் சம்பாதித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் முன்னாள் அதிபர் குடும்பத்தின் காரை வாங்கும் அளவிற்கு எப்படி தொடர்புகள் ஏற்பட்டது என்றும் விசாரணை செய்யப்படுகிறது.
மாடல் பியூமியின் வருமான ஆதாரம் ஒரு அழகுசாதன தயாரிப்பு நிறுவனம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு எப்படி இவ்வளவு பணம் என்று தெரியவில்லை. நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications