"இது" மட்டும்தான் திமுகவின் ஒரே குறிக்கோள் .. பிடிஆர் ஏன் அப்படி சொல்றார்? போட்டு தாக்கிய வானதி

புதுச்சேரியில் பாஜக மகளிரணி கூட்டத்தில் வானதி கலந்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதெல்லாம் சான்ஸ் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், திமுக இப்படி பேசிவருவது வேதனையாக இருக்கிறது.. திமுகவினர் இதையே குறிக்கோளாக வைத்துள்ளனர் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக மகளிரணி தேசிய நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் தொடங்கியது... இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் புதுச்சேரி வளர்ச்சி குறித்தும், பேசியிருந்தார்... அப்போது, முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், விருதுநகர் பலாத்கார சம்பவம் உள்ளிட்டு எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில்கள்தான் இவை:

 மகளிரணி கூட்டம்

மகளிரணி கூட்டம்

"முதன் முறையாக இப்படி புதுச்சேரியில் பாஜக மகளிரணி தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்... இந்த கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அதன் பலன்கள் குறித்து விளக்கபட உள்ளது..

 முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் அதன் ஒரு பகுதியாக பெண் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்க பட உள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகத்திற்கு பிறகு புதுச்சேரியில் பாஜக ஆட்சியை பிடித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான்... தமிழகம், ஆந்திரா தெலுங்கானா என பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சி வரத்தான் போகிறது.. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபையில் பாஜக நுழைந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது...

 பாலியல் குற்றம்

பாலியல் குற்றம்

பாலியல் குற்றத்தில் யார் ஈடுபட்டாலும் அதிகபட்ச உச்சபட்ச தண்டனை என்னவோ அதுதான் கொடுக்க வேண்டும்... இதைதான் பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. தமிழக சட்டப்பேரவையின் இருக்கை ஒதுக்கீடுகளை பொறுத்தவரை, பாலின சமத்துவம் என்பது சட்டமன்றத்தில் இருந்தே துவங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. இந்த விவகாரத்தில் உணர்வுபூர்வமாகவும் நுணுக்கமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.

 தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

புதிய முதலீடுகளை உருவாக்கவும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் பயணத்தை வரவேற்கிறோம்.. அதே சமயத்தில் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை.. 'ரீஜினல் டிஸ்பாரிட்டி' இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தை வளர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் யோசிக்கின்றார் என்று நிதியமைச்சர் பிடிஆர் சொல்கிறார்.. அனைத்து மாநிலங்களும் வளர்ந்தால் தான் இந்தியா வளரும்... அதற்காகத்தான் பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களுக்குமான வளர்ச்சியை யோசிக்கின்றார்...

Recommended Video

    இட ஒதுக்கீடு இருப்பதனால் தான் பெண்களுக்கு வாய்ப்பே கிடைக்குது - வானதி ஸ்ரீனிவாசன்
     வெளிநாடுகள்

    வெளிநாடுகள்

    தமிழக முதல்வர் தமிழகத்தின் பெருமைகளை வெளி நாடுகளுக்கு எடுத்து செல்வது தமிழகத்திற்கு பெருமைதான். ஒட்டுமொத்த இந்தியா முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்படவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையும்.. ஆனால், எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம், தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசுவதையும், செயல்படுவதையும் திமுகவினர் குறிக்கோளாக வைத்துள்ளனர். அவர்களின் இந்த எண்ண ஓட்டம் தான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+