Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் தனியார் நடத்தும் பார்முலா 4 பந்தயத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்குவது ஏன்? ஹைகோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் நிறுவனம் நடத்தும் பார்முலா 4 பந்தயத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக ஃபார்முலா 4 கார் பந்தய போட்டி நடத்தப்படவுள்ளது.

Why is the privately run Formula 4 race in Chennai getting so much funding? High Court

இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டது. ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. சென்னை பெருநகர வளரர்ச்சி குழும நிதியை கார் பந்தயத்திற்கு பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்திற்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் வீதி கார் பந்தயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளபோதும், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச தரத்திலான பந்தயத்தடம் உள்ள நிலையிலும் நகரின் மத்தியில் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆர்வத்தில் தொடங்கிய எண்ணத்திற்கு, முதல்வர் அனுமதி அளித்துள்ளதாகவும், கோடிக்கணக்கில் அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பந்தயத்திற்கு வரும் வருமானம் அனைத்தும் தனியார் நிறுவனத்திற்கு செல்கிறது என்றும், பந்தயத்தை நடத்தும் தனியார் அமைப்பு குறைந்த அளவே முதலீடு செய்துள்ள நிலையில், பந்தயத்தில் அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ செலவுகளை யார் ஏற்பது என்பதில் கேள்வி எழுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

மரங்களும் வெட்டப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, இதற்கு ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில், ஒரு மரம் கூட வெட்டவில்லை, அவ்வாறு வெட்டியதாக புகார் வந்தால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், துறைமுகம் மற்றும் கடலோர காவல்படை அலுவலகங்கள் அருகில் இல்லை என்றும், ராணுவ அலுவலகங்களுக்கு செல்ல இடையூறு இல்லாத வழி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பந்தய தடத்திற்கான சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன என்றும், பந்தய வழித்தடத்தின் அருகே குடியிருப்பு ஏதும் இல்லை என்றும், பந்தய நாட்களில் பொதுமக்கள் யாரும் அதை பயன்படுத்த போவதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்திற்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா என கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் நடைமுறையில் தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம் தரப்பில், ஏற்கனவே ஹைதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்தியுள்ளதாகவும், பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் சேர்த்து பொது காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பாண்கள், கட்டமைப்பு, காப்பீடு என 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசிற்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+