2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ சேர்க்கை அறிவிப்பு தாமதம்.. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை
சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (ஆர்டிஇ) பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வி பெற முடியும். ஆனால் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ சேர்க்கை அறிவிப்பு தொடர்ந்து தாமதம் ஆகி வருகிறது. இதுவரை அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் அரசை கேள்வி எழுப்பி பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எஸ்டிபிஐ கட்சி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வியை உறுதி செய்கிறது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை இணையதளம் வழியாக ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஆர்டிஇ சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். இது பெற்றோர்கள் தேவையான ஆவணங்களைத் தயாரித்து விண்ணப்பிக்க உதவுகிறது. கடந்த ஆண்டு, ஏப்ரல் 1 அன்று அறிவிப்பு வெளியாகி, ஏப்ரல் 20 முதல் சேர்க்கை தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்தத் தாமதம், 2025-26 கல்வி ஆண்டில் தங்கள் குழந்தைகளை ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சேர்க்க எதிர்பார்க்கும் பெற்றோர்களிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படவுள்ள நிலையில், இந்தத் தாமதம் சேர்க்கை செயல்முறையை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர். எனினும், இந்த ஆண்டு அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம், இலவச கல்வி நிறுத்தப்படலாம் என்ற வதந்திகளைத் தூண்டி, பொதுமக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.
எனவே, 2025-26 கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ விண்ணப்ப அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும். மேலும், இணையதளத்தில் விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள், காலக்கெடு உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாகப் புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பான கோரிக்கை மனுவும் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி, பெற்றோர்களின் அச்சங்களைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications