மாணவர் பாரதிதாசனுக்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பது ஏன்.. கனிமொழி எம்பி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியாவில் ஆராய்சி படிப்பு படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன? திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சூழலில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசு இரண்டு நாளில் பணம் விடுவிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

மலேசியாவில் ஆராய்சி படிப்பு படிக்கும் மாணவர் பாரதிதாசன் தனக்கு பணம் விடுவிக்கப்படாத விவகாரம் தொடர்பாக உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்" என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

Why is the TVK government imposing such strict restrictions on student Bharathidasan Kanimozhi MP

அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.

ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்! " இவ்வாறு கூறியிருந்தார்.

இதை டேக் செய்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன? கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.

அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது. என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் தளபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்" இவ்வாறு கூறியிருந்தார்.

இதனிடையே பல்வேறு விமர்சனங்கள் சர்ச்சைகளை தொடர்ந்து விளக்கம் அளித்த அமைச்சர் வன்னியரசு, பாரதிதாசன் ஆராய்ச்சிக்கு தேவையான தொகை 2 நாட்களில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+