இதுதான் தமிழன்னையா? அங்க என்னமோ இருக்கே.. வட்டம் போட்டு காட்டிய "தங்கம்".. அண்ணாமலைக்கு பளீர் கேள்வி
சென்னை: தமிழன்னை குறித்த புகைப்படம் ஒன்றை பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்தது சர்ச்சையாகி உள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. இவருக்கு கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது.
நேற்று இத்தாலியிலுள்ள வாடிகன் நகரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் இந்த பட்டம் அளிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து
இந்த பட்டம் வழங்கும் நிகழ்வில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ரோமில் தமிழ்த்தாய் பாடப்பட்டது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு இருந்த திருச்சபை பாதிரியார்கள் எல்லோரும்.. இந்த பாடலுக்கு எழுந்து மரியாதை செய்தனர். ரோமில் தமிழ்த்தாய் பாடப்பட்டது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து இந்த வீடியோவை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே! என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு தமிழ் தாய் வாழ்த்து புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இது சந்தோஷ் நாராயணன் என்ற கலைஞர் வரைந்த ஓவியம் ஆகும். தமிழன்னையை தமிழர்களின் நிறத்தில் மிகவும் அழகாக, ரௌத்திரமாக, கையில் ழகரத்தின் சூலம் ஏந்தி நிற்பது போல காளியின் தோற்றத்தில் வடிவமைத்து இருந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருந்தார்.

ரகுமான் போட்டோ
முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி பேச்சுக்கு எதிராக இதே புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அப்போது பாஜகவினர் இதை எதிர்த்து இருந்தனர். தமிழர்களை கருப்பாக காட்டிவிட்டார்.. தமிழன்னை கருப்பு இல்லை என்று பலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இது அப்போதே பெரிய சர்ச்சையானது.

அண்ணாமலை போட்டி
இந்த நிலையில் பாஜக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு போட்டியாக இன்னொரு தமிழன்னை புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே என்று குறிப்பிட்டு இருந்தார். இதில் நெற்றியில் போட்டு வைத்து, கோவிலில் இருக்கும் சிலை போல தமிழன்னையை வடிவமைத்து அண்ணாமலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பல கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

தங்கம் தென்னரசு பதில்
இந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இதை விமர்சனம் செய்து பதிவிட்டு இருக்கிறார். அதில், இருக்கும் ஸ என்று வார்த்தையை அவர் விமர்சனம் செய்துள்ளார். தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் 'ஸ' வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் 'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்"என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார், என்று தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications