Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானிலை ஆய்வில் குழப்பங்கள்?... அதற்கு இதுதான் காரணம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழைக்குப் பின் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையை இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாகக் கணிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

Why is there so much confusion in meteorology?

அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது? உண்மையாகவே இந்திய வானிலை மையம் முறையாக எச்சரிக்கவில்லையா?

வானிலை ஆய்வில் ஏன் இத்தனை குழப்பங்கள்? நம்மிடம் வசதிகள் இல்லையா? சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"தமிழ்நாட்டில் இதற்கு முன்னால் நீலகிரியில் உள்ள கேத்தி பகுதியில் 85செமீட்டர் மழைப் பதிவானது. அதுதான் இதுவரை அதி கனமழையாக இருந்தது.

அடுத்து 1976இல் சென்னையில் 24 மணிநேரத்தில் 45செமீட்டர் மழை பெய்துள்ளது. ஆனால் இதையும் தாண்டி இந்தமுறை காயல்பட்டினத்தில் 95செமீட்டர் பதிவாகி இருக்கிறது.

Why is there so much confusion in meteorology?

இதற்கு வானிலை அமைப்பின் கூறுகள்தான் காரணம். தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் கிழக்கிலிருந்து ஈரம் மிகுந்த வங்கக் காற்று வீசி உள்ளது. இந்தியக் கடல் பகுதியின் தெற்கிலிருந்து இந்த ஈரம் மிகுந்த காற்று வருகிறது. இந்த இரண்டும் சேர்ந்து சுழற்றி உருவாகி உள்ளது. இதுதான் பிரதான காரணம்.

அடுத்து அதற்கு ஆதரவாக மேலடுக்கில் 5.8 உயரம் வரை ஒரு சுழற்சி உருவாகியுள்ளது. இந்தச் சுழற்சியும் சேர்ந்ததால்தான் அதிக மழை பெய்துள்ளது.

ஈரம் மிகுந்த காற்று, பலமான காற்று அடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கூடவே மேலடுக்கு சுழற்சி இவை அனைத்தும் சேர்ந்துள்ளது. கூடவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் பங்களிப்பும் இதில் கலந்திருக்கிறது. இந்த மலையானது காற்றுக்கு ஒரு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Why is there so much confusion in meteorology?

இதனால்தான் தென்மாவட்டங்களில் காற்று குவிதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சுழிப்புத் திறன் அதிகரித்துள்ளது. காற்றானது பல திசைகளிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருகிறது.

வங்கக் கடலிலிருந்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து வந்துள்ளது. இது ஒரு இடத்தில் சேர்ந்தால் அதற்குப் பெயர் காற்றுக் குவிதல் எனப் பெயர்.

இப்படி காற்று ஒரு இடத்தில் குவியும்போது, சுழிப்பு திறன் அதிகரிக்கும். அப்படிச் சுழிப்பு அதிகமாவதை இயற்கை ஏற்காது. ஆகவே அது மிதப்பாற்றல் பெற்று மேலே செல்ல முற்படும்.

அது மேகமாக எந்தளவுக்கு மேல் நோக்கிச் செல்கிறதோ, அந்தளவுக்கு மழை பெய்யும். அதன் காரணமாகவே இந்தப் பெரும் மழை தற்போது ஏற்பட்டுள்ளது.

Why is there so much confusion in meteorology?

பொதுவாக மன்னார் வளைகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் தமிழ்நாடு முழுவதும் மழை வரும். அதை மாதிரியான ஒரு அமைப்புகூட தற்போது இருந்துள்ளது.

நான் பொறுப்பிலிருந்த காலத்தில் 25செமீட்டர்தான் அதிக கனமழைக்கான அளவாக இருந்தது. இப்போது 20செமீட்டரையே அதிக கனமழைக்கான அளவீடாக மாற்றி இருக்கிறார்கள்.

இந்த மழையின் அளவை பல்வேறுவிதமான கணினிகள் கணிக்கின்றன. Access weather model australia, American gfs weather model, European weather model, German weather model எனப் பல வகைகள் உள்ளன. இந்தியாவில் American gfs weather model ஐ வைத்துத்தான் கணிக்கிறோம்.

இந்த ஒவ்வொரு மாடல் கணினியும் ஒவ்வொருவிதமான கணிப்பைத்தான் காட்டும். ஒரு கணினியில் வரும் ரிசல்ட் அப்படியே மற்றொரு கணினியில் இருக்காது.

ஆகவே, நாம் தோராயமாகத்தான் கணிக்க முடியும். 20 செமீட்டர் மேல் கனமழை என்றால் அது எந்த அளவுக்குப் போகலாம். 20 செமீட்டர் என்று வந்துவிட்டாலே நாம் உஷார் ஆகிவிட வேண்டும். அதுவே நல்லது.

வானிலை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் European weather model மிகச் சிறப்பாகக் கணிக்கும் என்று சொல்வார்கள். அதில் கூட துல்லியம் இருக்கும் எனச் சொல்ல முடியாது" என்றார் அவர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+