ஒரே நேரத்தில் 2 காதல்.. விக்ரமன் ரிப்போர்ட்டை வெளியிடாத திருமாவளவன்? கிருபா பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் தொடர்பான விசாரணை அறிக்கையை விசிக தலைவர் எம்பி திருமாவளவன் வெளியிடாமல் காலம் தாழ்த்துவதாக கிருபா முனுசாமி என்ற பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் விக்ரமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதற்கு முன் பல்வேறு சேனல்களில் பணியாற்றி இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வளர்ந்து வரும் இளம் தலைவராக பார்க்கப்படுகிறார்.

இவர் மீது கிருபா முனுசாமி என்ற பெண் சில நாட்களுக்கு முன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் கூறினார் . நேற்று இதே குற்றச்சாட்டுகளை மீண்டும் வைத்த கிருபா பல பெண்களிடம் காசு வாங்கி இவர் ஏமாற்றி உள்ளதாகவும் கூறினார்.
இதற்கான பல்வேறு வாட்ஸ் ஆப் சாட் ஆதாரங்களையும் வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில்தான் விக்ரமன் தொடர்பான விசாரணை அறிக்கையை விசிக தலைவர் எம்பி திருமாவளவன் வெளியிடாமல் காலம் தாழ்த்துவதாக கிருபா முனுசாமி என்ற பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இது தொடர்பாக கிருபா செய்துள்ள போஸ்டின் ஒரு பகுதியில், விக்ரமன் என்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதோடு எனக்கு எமோஷனல் டார்ச்சர் கொடுத்தார். இதையடுத்து அவரை பற்றி தெரிந்து கொள்ள விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்று கூறிய 15க்கும் மேற்பட்டோரிடம் பேசினேன்.

அதில்தான் விக்ரமன் பலரையும் ஏமாற்றியது எனக்கு தெரிந்தது. அவர்களில் பலருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் சில queer ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார். இதனால் விக்ரமன் மீது நான் புகார் கொடுக்க போவதாக கூறினேன். இதையடுத்து உனக்கு சின்ன ஆட்களை மட்டுமே தெரியும். ஆனால் எனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழு உள்ளது என்று கூறி என்னை மிரட்டினார்.
அதோடு விசிக திருமாவளவன் ஆதரவையும் கேட்டார். இதனால் நான் அவருக்கு எதிராக 20 பக்க புகாரை கட்சியிடம் கொடுத்தேன். இதையடுத்து தொடக்க விசாரணை மற்றும் முதன்மை சாட்சியத்தின் அடிப்படையில் கட்சித் தலைவர் திருமா 2 வெளி உறுப்பினர்களைக் கொண்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க சொன்னார். 20 நாட்களுக்குள் விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க சொன்னார். காதலித்து ஏமாற்றுவது, முறைகேடு, நிதி மோசடி ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவண ஆதாரங்கள், 8 சாட்சி ஆதாரங்களை இதில் நான் சமர்ப்பித்தேன்.

இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 40 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஒரு மாதமாகியும், அறிக்கையின் நகல் எனக்கு வழங்கப்படவில்லை. நான் ஒரு மாதமாக இடைவிடாமல் முயற்சி செய்து வருகிறேன். குழு உறுப்பினர்கள் என்னிடம் அறிக்கையை கொடுக்கவில்லை . அலுவலகப் பணியாளர்கள் அதைப் பற்றி பேச பயப்படுகிறார்கள், அந்த அறிக்கையைப் பகிர்ந்து கொள்ள பயப்படுகிறார்கள்.
விக்ரமனுக்கு எதிரான புகார்கள் உண்மையானது என்று அந்த அறிக்கை வந்ததாக கேள்விப்பட்டேன். அதோடு அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் திருமா என்னிடம் அந்த அறிக்கையை காட்டாமல் இருக்கிறாரா? , என்று திருமாவளவனுக்கு கிருபா கேள்வி எழுப்பி உள்ளார்.

என்னை பல்வேறு வகைகளில் அவர் ஏமாற்றி உள்ளார். அவர் ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் என்று வாங்கியவை எல்லாம் என்னிடமிருந்து சுரண்டப்பட்டவை. அவர் ஒரு யூடியூப் சேனலை நடத்த போவதாக கூறி ஆப்பிள் லேப்டாப்பை வாங்கும்படி என்னை சித்திரவதை செய்தார். ஆனால் அதை தொடங்க கூட இல்லை அவர் தனக்குச் சொந்தமான காருக்கான டவுன்பேமென்ட் & EMIகளை என்னிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்கினார், என்று அந்த பெண் தனது புகாரில் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications
