புழுங்கிய அமைச்சர்கள்! என்ன செய்யலாம் சொல்லுங்க.. படீரென கேட்ட ஸ்டாலின்.. குலுங்கிய "கோட்டை"!
சென்னை: தமிழ்நாட்டில் முக்கியமான ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரை முதல்வர் ஸ்டாலின் மாற்ற இருக்கிறாராம். இந்த மாற்றத்தில் பல முறைகள் கையாளப்பட உள்ளதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ். அதிகாரிகள் 30 பேர் வரை மாற்றுவதற்கான பட்டியலை ரெடி செய்து வருகிறார் முதல்வர். இதுவரை அதிகாரிகள் மாற்றத்தில் அமைச்சர்கள் தொடங்கி திமுக மா.செ.க்கள் வரை யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
முதல்முறையாக, அதிகாரிகள் மாற்றம் குறித்து அமைச்சர்களிடன் கருத்தை சமீபத்தில் கேட்டறிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
என்ன போய்கிட்டே இருக்கு? முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்த மிக நீளமான சென்னை மேம்பாலத்தின் சிறப்புகள்

முதல்வர் ஸ்டாலின்
அதாவது, 20-க்கும் மேற்பட்ட துறைகளில் அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. அமைச்சர்களுக்கு தெரியாமலே பல விசயங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இது ஒரு கட்டத்தில் அமைச்சர்களுக்கு தெரியவரும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது. உடனே தனது துறையின் உயரதிகாரிகளிடம் அமைச்சர்கள் கோபம் காட்டும் போது, முதல்வரின் செயலாளரை கேட்டுக்கோங்க சார் என்று பதில் வருகிறதாம்.

அதிகாரிகள் மாற்றம்
எங்களுக்கு எதுவும் தெரியாது.. முதல்வரிடம் பேசுங்கள் என்று அதிகாரிகள் கூலாக சொல்லிவிடுகிறார்களாம். இதனால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பல துறைகளில் சின்க் இல்லாமல் செல்கிறதாம். அமைச்சர் ஒரு உத்தரவு போட அது நடைமுறைக்கு வர தாமதமும் ஆகிறதாம். அதிகாரிகள் சிலர் அமைச்சரிடம் ஆலோசனையே செய்யாமல் தான் போன போக்கில் முடிவுகளை எடுக்கிறார்களாம்.

புழுங்கிய அமைச்சர்கள்
இதனால் என்ன செய்வதென தெரியாமல் மனம் புழுங்கிய அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்கள். அதே போல மா.செ.க்கள் பலரும், தங்கள் மாவட்டத்தில் காவல்துறையினர் ஒத்துழைப்பதே இல்லை என ஸ்டாலினிடம் குறைபட்டுக் கொண்டார்கள். இது ஒருபுறமிருக்க, சில அமைச்சர்களின் அடாவடி பேச்சால், துறையின் உயரதிகாரிகள் பலர் நொந்து போயுள்ளனர்.

தலைமை செயலாளர்
தலைமைச் செயலாளரை சந்திக்கும் இவர்கள், அமைச்சர்களின் அடாவடி பேச்சினை சுட்டிக்காட்டி, துறையிலிருந்து எங்களை மாற்றி விடுங்கள். வேறு துறைக்கு எங்களை அனுப்புங்கள். கஷ்டமாக இருக்கிறது என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய காரணங்களால் தான் அதிகாரிகளை மாற்றும் முடிவுக்கு வந்து இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

அவசர முடிவுகள்
இது போக சில அதிகாரிகள் சமீப நாட்களில் எடுத்த முடிவுகள், அவசரமான அறிவிப்புகள் அரசுக்கு எதிராக திரும்பியது. அரசு விமர்சனத்தில் சிக்கவும் இது காரணமாக இருந்தது. இதை எல்லாம் கண்காணித்தே முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளை மாற்றும் முடிவை எடுத்துள்ளாராம். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒத்துப்போக கூடிய வகையில் முதல்வர் ஸ்டாலின் மாற்றம் செய்ய இருக்கிறாராம். முதல்வரின் இந்த முடிவால் கோட்டை வட்டாரம் கொஞ்சம் பரபரப்பில்தான் இருக்கிறாராம்.

கோட்டை வட்டாரம்
நீங்கள் விரும்பும் அதிகாரிகள் யார்.,. உங்களுக்கு என்ன வேண்டும், யார் வேண்டும் என அமைச்சர்களிடம் முதல் முறையாக கேட்டிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்களும் தங்களுக்கு தோதான அதிகாரிகளை சொல்லியிருக்கிறார்கள். இவர்களையே அதிகாரிகளாக நியமித்து, துறைகளில் நடக்கும் கருத்து வேறுபாட்டை சரி செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அமைச்சர்களை குளிர்விக்கும் வகையில் அதிகாரிகள் மாற்றம் வரப்போகிறது என்கிறது கோட்டை வட்டாரம்.