விஜய்க்கு சிக்கலாக மாறிய ஓம்.. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை கிடைப்பதில் சிக்கல் ஏன்? உண்மையான காரணம்
சென்னை: ஜனநாயகன் படத்தின் தணிக்கை பிரச்சனை ஆவாதற்கு, படத்தில் உள்ள மத ரீதியிலான கருத்துக்களே காரணம் என்று கூறப்படுகிறது. படத்தில் வில்லன் போடும் கெட்ட திட்டத்திற்கு o - m என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதுவே படம் வெளியாவதில் சிக்கலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
அதாவது o - m என்பது OM என்பதை குறிப்பிடுவது போல இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்து மதத்தின் முக்கியமான மத சொல், மந்திர சொல்லான OM என்பதை வில்லன் போடும் திட்டத்திற்கு வைத்துள்ளது. ஜனநாயகன் படத்தின் டிரைலரில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதான் படத்திற்கு தணிக்கை கிடைக்க சிக்கல் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ள நிலையில், அதற்குத் தேவையான தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

யு சான்றிதழ் வழங்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. படக்காட்சிகள் காரணமாக யு சான்றிதழ் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வாரியம் பரிந்துரைத்த சிறிய மாற்றங்களுக்கும் படக்குழு சம்மதித்தபோதிலும், சான்றிதழ் இன்னும் நிலுவையில் உள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு சிக்கல்
இந்தத் தாமதம் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் மத்தியில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. 'ஜனநாயகன்' மற்றும் ஜனவரி 10 அன்று வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஆகிய இரு படங்களுக்குமான முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரு படங்களும் சான்றிதழுக்காக காத்திருக்கின்றன.
இதற்கிடையில், விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பிரதிநிதிகள் இந்தத் தாமதம் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று, துணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் CBFC-க்கு எச்சரிக்கை விடுத்தார். சான்றிதழ் செயல்முறைக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன எனக் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நிர்மல் குமார் கூறியதாவது: "மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கான காலக்கெடு இன்னும் சில மணிநேரங்கள்தான். இல்லையெனில், நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். விஜய் அண்ணனுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினர்கள் டிசம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து திரைப்பட சான்றிதழை முடக்கி வைத்துள்ளனர்."
தணிக்கைச் சான்றிதழ் இல்லாதபோதும், 'ஜனநாயகன்' பட டிக்கெட்டுகள் நாட்டின் சில திரையரங்குகளில் முன்பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய சூழலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
ஜனநாயகன் படத்தின் தணிக்கை
ஜனநாயகன் படத்தின் தணிக்கை பிரச்சனை ஆவாதற்கு, படத்தில் உள்ள மத ரீதியிலான கருத்துக்களே காரணம் என்று கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் டிரைலரில் மட்டுமன்றி படத்தின் காட்சிகளிலும் இந்து மதத்திற்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது. இந்த காட்சிகள்தான் தணிக்கை குழுவை யோசிக்க வைத்துள்ளதாம். இதுதான் படத்திற்கு தணிக்கை கிடைக்க சிக்கல் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications