இதெல்லாம் யார் ப்ரோ எழுதித்தரா? தமிழக எம்பி எண்ணிக்கை குறைந்தால் பிரச்சனை இல்லையாம்.. விஜய் அறிக்கை
சென்னை: மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சனைகள். விலைவாசி உயர்வு வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான்.
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை. Shortage of MPs not all a problem being faced by an ordinary citizen. It is a democratic issue in Principle and not a Principal democratic issue, என்று விஜய் கூறி இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அனைத்து கட்சி கூட்டம் பற்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு
நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் "மாநிலங்களின் மக்கள் தொகை' என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
நம் அரசியல் சாசன 81ஆவது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் 'சம எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது (equal population representation for each MP). இதற்கு அடிப்படையான One vote-one value என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும். இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.
புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக கல்வி சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம். பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால் ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது. அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது. ஏனென்றால்.
1. தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை. Billee முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
2. மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சனைகள். விலைவாசி உயர்வு வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான்.
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை. Shortage of MPs not all a problem being faced by an ordinary citizen. It is a democratic issue in Principle and not a Principal democratic issue. மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்சனைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்து இருக்கிறேன். அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும், என்றுள்ளார்.
சர்ச்சை:
அவர் அறிக்கையில், மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சனைகள். விலைவாசி உயர்வு வேலையின்மை, தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான்.
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை. என்று கூறி இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்தி திணிப்பு விவகாரத்தில் அவர் அனுபவம் இன்றி பேசியதாக புகார் வைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக முதலாண்டு ஆண்டு நிகழ்வில் பேசிய விஜய், இந்தி எதிர்ப்பை பற்றி பேசினார். இந்தி என்ற வார்த்தையை பயன்படுத்தாமலே இந்தி திணிப்பை பற்றி பேசினார். இப்போ புதுசா ஒரு பிரச்னையை கிளப்பி இருக்காங்க.புதிய கல்விக்கொள்கையை கொடுக்கவில்லை என்றால் மாநில நிதியை நிறுத்துவோம் என்கிறார்கள். கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. வாங்க வேண்டியது இவர்கள் கடமை. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை. கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி BRO.
இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும். நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தினம் தினம் இதை சொல்லி சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள்.. இதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா? இவர்கள் அடித்துக் கொள்வதுபோல அடித்துக் கொள்வார்களாம்... மக்கள் அதை நம்பணுமாம்! What Bro? Its Very Wrong Bro... இதுக்கு இடையில நம்ம பசங்க.. உள்ளபோய் #TVKforTN என சம்பவம் செய்துவிட்டு வந்துவிட்டார்கள்! யார் சார் நீங்கள்லாம்? எங்க சார் இருக்கீங்க? ஸ்லீப்பர்செல்ஸ் மாதிரி", என்றெல்லாம் விஜய் பேசி இருக்கிறார்.
சர்ச்சையான விஷயம்
விஜய் சொல்வது போல இந்தி திணிப்பு விவகாரம் புதிய பிரச்சனை அல்ல.. அது நெடுங்காலமாக.. சுதந்திரத்திற்கே முன்பே இருக்கும் பிரச்சனை. தமிழர்கள் உயிர் விட்ட அளவிற்கு தீவிரமானது. சரி விஜய் புதிய கல்விக்கொள்கையை புதிய விவகாரம் என்று சொல்கிறார் என்று பார்த்தால் அதுவும் 3 வருடங்களுக்கு மேலாக நடக்கும் உரிமை போராட்டம்.
இதை எல்லாம் கிண்டல் அடிக்கும் விதமாக What Bro? Its Very Wrong Bro என்ற கிண்டல் தொணியில் பேசுவது.. பாயாசம் என்று கிண்டலாக கூறுவது கடும் விமர்சனங்களுக்கு ஆளாக இருக்கிறது. ஹேஷ்டேக் சண்டையால் பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் அதே விஜய் தனது ரசிகர்கள் செய்யும் ஹேஷ்டேக் சண்டையை "சம்பவம்" என்கிறார். அரசியல் முரண்!












Click it and Unblock the Notifications