Vijay: விருகம்பாக்கத்தைவிட்டுவிட்டு! பெரம்பூரில் விஜய் போட்டியிடுவது ஏன்? திமுகவின் கோட்டையாச்சே!
சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அவரை ஏன் பெரம்பூரில் தொகுதியில் போட்டியிட கூறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முகூர்த்த நாள், சஷ்டியான இன்று, பெரம்பூரில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, த.வெ.க. தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தனர்.
பெரம்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் சிவா, தனது உரையில், "தலைவருக்கு விருப்பமான தொகுதியாக பெரம்பூரை மாற்றிவிட்டேன். கடந்த ஓராண்டில், 44,000 புதிய உறுப்பினர்களை இத்தொகுதியில் கட்சியில் சேர்த்துள்ளேன்" என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், "இன்னும் 35 நாட்களே உள்ளன; ஒரு நாளும் தூங்காமல் உழைத்து, தளபதியை வெற்றி பெறச் செய்து முதல்வராக்க வேண்டும்" எனவும் அவர் தொண்டர்களுக்கு உத்வேகமளித்தார்.
சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபு, கூட்டத்தில் பேசுகையில், "முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான். இங்கிருந்தே அடுத்த முதல்வர் உருவாகப் போகிறார்" எனத் தீர்க்கமாக அறிவித்தார்.
அவர் தனது உரையில், "தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளில் ஒரு வட்டச் செயலாளர் பதவி பெறவே 25 ஆண்டுகள் குடும்பத்தைப் பிரிந்து தியாகம் செய்ய வேண்டும். ஆனால், த.வெ.க.வில் ஓர் ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளராக முடியும்" என்று கூறி, கட்சி வழங்கும் எளிமையான வளர்ச்சி வாய்ப்புகளைச் சுட்டிக் காட்டினார்.
"தி.மு.க., அ.தி.மு.க.வினர் என்ன செய்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். பொதுச்செயலாளர் உத்தரவிட்டால், நான் அவர்களை அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன்," என்று எச்சரித்த வி.எஸ். பாபு, "திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதிகள் அனைத்தும் த.வெ.க.வுக்குதான். தலைவரை ஒரு நான்கைந்து முறை பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்" என்றும் சவால் விடுத்தார்.
இறுதியாக, இந்நிகழ்வில் பேசிய செங்கோட்டையன், "பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் தங்களது டெபாசிட்டை இழப்பார்கள்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்தச் செயல்வீரர்கள் கூட்டம், வரவிருக்கும் தேர்தலுக்கான த.வெ.க.வின் தீவிரப் பிரச்சாரத்திற்கு வலுவான தொடக்கமாக அமைந்தது.
இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், எந்த இடத்தில் அதிக வறுமை இருக்கிறதோ அந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டும் என தலைவர் விஜய் சொல்வார்.
எனவே அவர் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டும் என தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பம். வட சென்னை குறித்து தவறான பிம்பத்தை அதிமுக , திமுக வைத்துள்ளன. இதை மாற்ற வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதவ் கூறுகையில், அமைதியாக பிரச்சாரம் செய்த நமது நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் விஜய் முதலில் வடசென்னையில் களமிறங்குகிறார். 4 மாத கர்ப்பிணியான எங்கள் தங்கை வயிற்றில் எப்போது கை வைத்தார்களோ அப்போதே தலைவர் பெரம்பூரில் இருந்து தொடங்குங்கள் என்று கூறியிருந்ததாக ஆதவ் கூறினார்.
வி எழுத்தில் தொடங்கும் தொகுதிகள் இல்லாமல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். திமுகவின் கோட்டையாக பெரம்பூர் தொகுதி சொல்லப்படுகிறது. எப்படியாவது இங்கு விஜய்யை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என தவெகவினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் திமுக கோட்டையில் விஜய்யால் மோதி பார்க்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications