விஜய் மூச்சே விடலையே.. இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாரே.. ஸ்டன் ஆன தவெக தலைகள்.. அட போங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கரூருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் செல்வதில் விஜய் இப்போதைக்கு ஆர்வம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர், சமீபத்தில் விஜயை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

TVK Vijay

கரூர் செல்லும் விஜய்

விஜயின் கரூர் பயணம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனான சந்திப்பிற்காக ஒரு தனியார் மண்டபம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு நடைபெறும் தேதி, இடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு குறித்த விவரங்களை கட்சி சார்பில் கரூர் காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு பொதுமக்களுக்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாத வகையிலும், பங்கேற்பவர்களுக்கு சிரமம் விளைவிக்காத வகையிலும் நடைபெறுவதை உறுதி செய்வதே திட்டம் என்று நிர்மல் குமார் தெரிவித்தார். சாட்சிகளை அச்சுறுத்தி வாக்குமூலங்களைத் திரிக்க முயற்சிகள் நடந்ததாகவும், சி.பி.ஐ. விசாரணையின்போது உண்மை வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் என நிவாரணம் வழங்குவதாக கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகை முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, ஆதார் இணைப்புடன் கூடிய சரிபார்ப்பை ஆனந்த் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருகிறார்.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினரும், ஒரு தனியார் கல்வி குழுமத்தின் தலைவருமான என். மேரி வில்சன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வாழ்நாள் நிதி உதவி, குழந்தைகளின் பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி வரை முழு கல்வி உதவி, மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை வழங்கத் தொடங்கியுள்ளார்.

ஸ்டாலின் சொன்ன விஷயம்

விஜயின் கரூர் விஜய் தொடர்பாக ஆலோசனை செய்த முதல்வர் ஸ்டாலின், நாம் எதையும் தடுக்க கூடாது. விஜய் முறையாக அனுமதி கேட்டால்.. போலீசிடம் கடிதம் கொடுத்தால்.. கண்டிப்பாக முறையாக அனுமதி கேட்டால்.. அனுமதி கொடுங்கள். நாம் எதையும் தடுக்க வேண்டாம்.

அவர்கள் கேட்கும் கோரிக்கைகளை பாருங்கள். பொதுவாக விதிக்கப்படும் அதே கட்டுப்பாடுகளை மட்டுமே விதியுங்கள். கூடுதல் பாதுகாப்பு கேட்டால் தீபாவளி பாதுகாப்பிற்கு இடையே அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் ஆர்வம் காட்டவில்லை

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கரூருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் செல்வதில் விஜய் இப்போதைக்கு ஆர்வம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு போக வேண்டாம். அங்கே மண்டபம் கிடைக்கிறது.. கிடைக்காமல் போவது பிரச்சனை இல்லை. கரூர் செல்வது இப்போதைக்கு சரியாக இருக்காது.

கொஞ்சம் யோசித்துவிட்டு கரூர் செல்லலாம். நான் போனால் சரியாக இருக்காது. என்னிடம் யாராவது நேரடியாக கேள்விகளை கேட்டால் சரியாக இருக்காது. சிலர் சட்டென கோபப்பட்டால் பிரச்சனை ஆகிவிடும் . அதனால் நாம் யோசித்து செல்லலாம். முதலில் இரண்டாம் கட்ட தலைவர்கள் போகட்டும்.. அவர்களை போய்விட்டு வந்த பின் நாம் போவதை பற்றி யோசிக்கலாம் என்று விஜய் கூறியதாக தெரிகிறது. விஜயின் இந்த நிலைப்பாடு தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+