திரும்ப பெறப்படும் ரூ. 2000.. ஆர்பிஐ அறிவித்ததும் நகைகளை வாங்கி குவித்த நகை கடைகள்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு நகை கடைகள் அதிக அளவில் தங்கங்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.

அப்போது 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பபெற ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.

Why Jewellers bought gold in bulk after the recalling of Rs.2000 notes?

வழங்க கூடாது: அதேபோல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.

ஆனால் இதன் அர்த்தம் இந்த பணம் செல்லுபடியாகாது என்பதல்ல. இந்த பணம் செல்லுபடியாகும். கையில் உள்ள பணத்தை கடைகள் எப்போதும் போல வாங்கிக்கொள்ள வேண்டும்.

அதை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். 20 ஆயிரம் ரூபாய் வரை ஒரு நாளுக்கு மாற்ற அடையாள அட்டை தேவை கிடையாது.

அதற்கு மேல் ஒரு நாளில் மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை தேவை. இந்த நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அதன்பின் இந்த பணம் மொத்தமாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.

ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் இந்த ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு உள்ளன.

Why Jewellers bought gold in bulk after the recalling of Rs.2000 notes?

நகை கடைகள்: இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு நகை கடைகள் அதிக அளவில் தங்கங்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும், நகை கடைகளுக்கு நகை விற்பனை செய்யும் டீலர்களிடம் இருந்தும் இவர்கள் நகைகளை வாங்கி உள்ளனர்.

மக்கள் பலர் பயந்து கொண்டு நகைகளை வாங்குவார்கள் என்பதால் ஸ்டாக் வைத்துக்கொள்ள இப்படி இந்திய நகை கடைகள் நகைகளை கூடுதலாக வாங்கி வைத்துள்ளனர். இருப்பினும், 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது காணப்பட்ட சூழ்நிலையைப் போல இப்போது இல்லை.

கையில் இருக்கும் காசை மாற்றிக்கொள்வதற்காக இப்போது மக்கள் இடையே பீதி இல்லை என்று நகைக்கடை அமைப்பான ஜிஜேசி தெரிவித்துள்ளது. கடந்த முறை பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது கையில் உள்ள காசை மாற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக நகை வாங்கினார்கள்.

ஆனால் இப்போது பலர் கையில் 2 ஆயிரம் ரூபாய் இல்லை. அதனால் மக்கள் யாரும் இதை மாற்ற நகை கடைகளுக்கு செல்லவில்லை.

உண்மையில், கடந்த இரண்டு நாட்களில், தங்கம் வாங்கியோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கேஒய்சி கொடுத்து தங்கம் வாங்க வேண்டும் என்பதால் ரூ.2,000 நோட்டுகளுக்கு மாற்றாக தங்கம் வாங்குவது குறைவாக உள்ளது.

கருப்பு பணத்தை தங்கம் வாங்கி மாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த முறையை போல இந்த முறை அதிக அளவு நகைகளை மக்கள் வாங்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+