விஜய் ’கொடி’ ஏற்றிய அடுத்த நாளே.. கட்சிக்காரர்களை அழைத்த ’மநீம’ கமல்ஹாசன்! ஓ இதுதான் மேட்டரா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ள நிலையில் தமிழக அரசியல் களத்தில் அதுதான் பேசுபொருளாகியிருக்கிறது. இந்நிலையில் நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார். ஆனால் விஜய் அரசியலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமலஹாசனை கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.

இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை.
அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ், இந்தியன் - 2 உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தினார். இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியலுக்கு களத்திற்கு தேவையான எதையும் கமலஹாசன் மேற்கொள்ளாததால் பல கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்த கமல், சுமார் 10 தொகுகளில் மட்டும் பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸின் ராகுல் காந்தி உடனான நெருக்கம் காரணமாகவே அவர் திமுக கூட்டணியில் இணைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் விரைவில் அவர் மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் அவரது கட்சியினர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாளான இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மநீம கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது, விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குகிறார். இந்நிலையில் விஜய் கட்சி கொடியேற்றிய அடுத்த நாளே கமல்ஹாசன் கட்சி செயற்குழுவைக் கூட்ட என்ன காரணம் என விசாரித்தோம்.
ஆனால் அதற்கும், கமல் கட்சி நிகழ்வுக்கு எந்த தொடர்பும் இல்லை, செயற்குழு கூட்டம் நடத்த வேண்டுமென பல நாட்களுக்கு முன்னரே கமல்ஹாசன் திட்டமிட்டதாகவும், இந்தியன் - 2 படத்துக்குப் பிறகு செயற்குழுவை கூட்ட திட்டமிட்ட நிலையில், தற்போது கூட்டம் நடைபெறுவதாகவும், விஜய் கட்சி நிகழ்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் மநீமவினர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications