மாதம் ரூ 60 ஆயிரம் தேவை! காமராஜர் மக்கள் கட்சியை தமாகாவில் இணைத்தது ஏன்? தமிழருவி மணியன் விளக்கம்
சென்னை: காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தது ஏன் என்பது குறித்து தமிழருவி மணியன் கடந்த மாதம் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.
2009ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்பதை தொடங்கினார் தமிழருவி மணியன். பின்னர் அதை 2022 இல் காமராஜர் மக்கள் கட்சி என மாற்றினார்.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் சரத்குமார். அவரை போல், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்துவிட்டார்.
இதுகுறித்து தமிழருவி மணியன் கடந்த மாதம் அளித்த பேட்டியில், டிசம்பர் 20ஆம் தேதி காமராஜர் மக்கள் கட்சியை தமாகாவுடன் இணைப்பது என முடிவு செய்துவிட்டோம். அரசியலுக்கு பணம்தான் முக்கியம். எனது கட்சியை நடத்த மாதம் ரூ 60 ஆயிரம் தேவைப்படுகிறது.
அதை ஆதரவாளர்கள், நண்பர்களிடம் பெற்று கட்சியை நடத்தி வந்தேன். இனி பணம் பெற மனம் இல்லாததால் காமராஜர் மக்கள் கட்சியை, தமாகாவுடன் இணைத்துவிட முடிவு செய்தோம். 55 ஆண்டுகளாக அரசியலில் பயணித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றாலும் ஊழல் கறைபடியாத கரங்களை கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டேன்.
தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பிரவேசிக்காதது வரலாற்றுப் பிழை. ஊழற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் இருந்தார். அவர் அவருக்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். தற்போது அரசியலுக்கு வந்துள்ள விஜய், மக்கள் சேவைக்காக கட்சி தொடங்கவில்லை. பணம் சம்பாதிக்கவே தொடங்கியிருக்கிறார். இதற்கு லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவே ஒரு எடுத்துக் காட்டு, சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசன் வாய்ப்பு அளித்தால் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications