கிருத்திகா உதயநிதி எடுத்த திடீர் முடிவு.. வீடியோ வெளியிட்டு பேச்சு.. தூக்கி கொண்டாடும் திமுகவினர்
கிருத்திகா உதயநிதி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: சென்னை மாநகராட்சி பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கழிப்பறை குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளது... இதனுடன் இணைந்து குரல் கொடுத்து, மக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார் கிருத்திகா உதயநிதி..!
Recommended Video
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், டைரக்டருமான கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், சமூக அக்கறை நிறைந்தவர்..
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்காக நடத்தி கொண்டிருப்பவர்... இதற்காகவே எளிய மக்களை தேடி சென்று அவர்கள் பயன்பெறும் வகையில், விழிப்புணர்வை ஊட்டி கொண்டிருப்பவரும்கூட..

கழிவறை
பெண்கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விடாமல் பேசி வருபவர்.. இந்நிலையில், கழிவறையின் அவசியம் குறித்தும் பொதுக் கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்தும், அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிருத்திகா பேசியுள்ளதாவது:

நல்ல அனுபவம்
"சின்ன வயதிலிருந்தே பயணம் செய்வது பிடிக்கும். என்னுடைய அப்பாவுடன் நிறைய பயணம் செய்துள்ளேன். இப்போ வரைக்கும் ஊர் சுத்தறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதெல்லாம் நல்ல அனுபவமா இருந்தாலும் எல்லாரும் சொல்லக்கூடிய ஒரு மோசமான அனுபவம் டாய்லட் பயன்படுத்துவதுதான். நாம யாருமே பப்ளிக் டாய்லெட் பக்கமே போக மாட்டோம்.. நான் நிறையமுறை, யார் என்றே தெரியாதவர்கள் வீட்டில் நின்று, அவர்கள் டாய்லெட்டை பயன்படுத்திக்கலாமா? என்று அனுமதி கேட்டுள்ளேன்..

கிருத்திகா அழைப்பு
இதற்கு ஒரு தீர்வு வரணும் என்பதற்காகத்தான் சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏப்ரல் 2,3 தேதிகளில் நடத்த இருக்கின்றன. மேப்பத்தான் சாந்தோம் உயர் நிலைப் பள்ளியில், ரீசைகிள் பின், சியர் ஆர்கனைசேஷன், டச் மினிஸ்ட்ரி, சென்னை மாநகராட்சி எல்லாரும் இணைந்து நடத்தக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி. அவர்கள், சென்னையிலுள்ள பொதுக் கழிவறைகளை அடையாளம் காணவுள்ளனர். மறுபடியும் பொதுக் கழிவுகளை மக்கள் பயன்பாட்டுக்கு எப்படி கொண்டுவரலாம் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளோம்..

கிருத்திகா சபாஷ்
இந்த நிகழ்ச்சியில் பலருடைய ஆலோசனைகளும் கேட்கப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் உங்களுடைய கழிப்பறை அனுபவ கதையை #OnceinaLOO என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு உங்கள் சமூக வலைதள பக்கத்தில் நீங்கள் பகிர வேண்டும்.. இதனால் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு பலரிடம் சென்றடையும்" என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். கிருத்திகாவின் இந்த புதிய முயற்சி பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.. அதிலும் திமுகவினர், இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications