Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘டைமிங்’.. நடுங்கிய டெல்லி! பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக.. தேஜஸ்விக்கு ஏன் சிக்கல்?: பத்திரிகையாளர் மணி

காஷ்மீர் முதல் குமரி வரை எதிர்க்கட்சிகள் குறிவைக்கப்படுவதாக விமர்சித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.

Subscribe to Oneindia Tamil

சென்னை : "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பாஜக அரசு அஞ்சுகிறது, நடுநடுங்குகிறது. அதை சிதைப்பதற்காக விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிட்டிருக்கிறது. தேஜஸ்வி குடும்பம் மீது மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு தான் தாக்குதல் அதிகமாகிறது" என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் இடங்களில் சோதனை நடத்தினர்.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சென்னை வந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்துப் பேசிச் சென்ற பின்னர் இந்த விசாரணை வேகமெடுத்ததுதான் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக நம்முடன் பேசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.

டைமிங் முக்கியம்

டைமிங் முக்கியம்

கேள்வி : ரயில்வே ஊழல் விவகாரம் 2021ல் சிபிஐ-யால் முடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக தேஜஸ்வி யாதவ் திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுச் சென்றபிறகு இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்திருக்கிறதே..

பத்திரிகையாளர் மணி : மணீஷ் சிசோடியா, கவிதா, தேஜஸ்வி ஆகியோர் தொடர்புடைய வழக்குகளில் தவறுகள் நடந்திருக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். ஆனால், இந்த'டைமிங்' தான் ரொம்ப முக்கியம். மார்ச் 1ஆம் தேதி சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரகடனம் செய்கிறார் தேஜஸ்வி. தேஜஸ்வி இங்கு வந்துவிட்டு பாட்னா சென்றதுமே, பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோ பரவியது. 3ஆம் தேதி சட்டப்பேரவையில் அமளி நடந்தது.

கர்ப்பிணி மருமகள்

கர்ப்பிணி மருமகள்

அதன்பிறகு 2 மாநில அரசுகளும், காவல்துறையும் எடுத்த துரித நடவடிக்கைகளால் அடுத்த 3 நாட்களில் விவகாரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் அத்துடன் விவகாரம் அடங்கவில்லை. தேஜஸ்வி யாதவ் பேசிவிட்டுச் சென்றபிறகு, அவரை அரசியலில் காலி செய்வதற்கான வேலையைத் தொடங்கியது பாஜக. ராப்ரி தேவி வீட்டில் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வரும் லாலு பிரசாத்திடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. கர்ப்பிணியாக இருக்கும் லாலு பிரசாத்தின் மருமகள் உட்பட யாரையும் வீட்டை விட்டு நகரவிடாமல் விசாரணை நடந்தது.

 மல்ட்டிபிள் அட்டாக்

மல்ட்டிபிள் அட்டாக்

இந்த அட்டூழியத்திற்கெல்லாம் காரணம் தேஜஸ்வி இங்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பதுதான். 2004-2009 காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக நடந்த வழக்கில் 2021ல் முடித்து வைத்த வழக்கை மீண்டும் 2022ல் வழக்குப்பதிவு செய்து தோண்டியிருக்கிறார்கள். 'மல்ட்டிபிள் அட்டாக்'. எதிர்க்கட்சிகளை குத்துயிரும் குலையுயுயிருமாக்கி தான் மட்டுமே ஆள வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே, சிசோடியா கைது, கவிதா விசாரணை, தேஜஸ்வி குடும்பம் மீதான விசாரணை ஆகியற்றைப் பார்க்க வேண்டும்.

பெயரைக் கெடுக்க

பெயரைக் கெடுக்க


அப்பட்டமான கோயபல்ஸ் பிரச்சாரத்தை மோடி அரசு மேற்கொள்கிறது. பாஜக அரசின் ஒரு அங்கமாக அமலாக்கத்துறை மாறிவிட்டது. அதனால்தான் 600 கோடிக்கு நிலத்தை வாங்கியதாக அறிவிப்பை கொடுக்கிறது. வழக்கமாக விசாரணை முடிந்த பிறகு தான் எவ்வளவு முறைகேடு நடந்தது எனத் தெரியவரும். ஒரு ரெய்டு முடிந்ததுமே இவ்வளவு ஊழல் எனக் கூறுவதெல்லாம் அரசியல் பழிவாங்கல். என்னென்ன கைப்பற்றினோம் என்ற பட்டியலைத் தரவில்லை. மாறாக பெயரைக் கெடுக்க வேண்டும், கேரக்டர் அசாசினேசன் செய்யவேண்டும் என்பதுதான் மோடி அரசின் ஆயுதம். அதற்கு பாஜக அரசின் ஊதுகுழலாக மாறிப்போன சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ, என்.சி.பி போன்றவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளை குறிவைத்து

எதிர்க்கட்சிகளை குறிவைத்து

கேள்வி : எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து விடக்கூடாது என்ற பயம் பாஜகவுக்கு வந்துவிட்டதா?

மணி : அந்த பயத்தின் காரணமாகவே சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ஏவிவிடப்படுகின்றன. மோடி அரசு வந்த பிறகு தான், அமலாக்கத்துறையின் புகழ் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமலாக்கத்துறை விசாரணையில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, பஞ்சாப்பில் பாதல், மகாராஷ்டிராவில் சரத் பவார், பிரஃபுல் படேல், தெலுங்கானாவில் கேசிஆர், கவிதா மீது அமலாக்கத்துறை வழக்கு. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மருமகன் மீது அமலாக்கத்துறை வழக்கு, கர்நாடகாவில் எடியூரப்பா மீதே வழக்கு, சிவகுமார், சித்தராமையா மீது வழக்கு, ஜெகன் மீது வழக்கு, கேரளாவில் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மீது வழக்கு. அதெப்படி காஷ்மீர் முதல் குமரி வரை எதிர்க்கட்சிகள் மீது மட்டும் அமலாக்கத்துறை சுற்றி சுற்றி வேட்டையாடுகிறது?

 பாஜக பதைபதைக்கிறது

பாஜக பதைபதைக்கிறது

எத்தனை பாஜக தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் உத்தமர்களா? பாஜகவில் சேர்ந்த நிமிடமே அவர்கள் ஊழல்கள் எல்லாம் மறைந்து புனிதர்களாகி விடுகிறார்கள். முகுல் ராய் பாஜகவில் சேர்ந்ததுமே வழக்கு முடிந்துவிட்டது. இதை எந்தக் கூச்சமும் இன்றி ஓப்பனாக செய்கிறது பாஜக. அதுதான் தேஜஸ்வி, கவிதா, சிசோடியா என தொடர்கிறது. தேஜஸ்வி குடும்பம் மீது மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு தான் தாக்குதல் அதிகமாகிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பாஜக அரசு அஞ்சுகிறது, நடுநடுங்குகிறது. அதை சிதைப்பதற்காக விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+