4 சாதனைகள்.. ஸ்டாலினை திரும்பி பார்த்த வடக்கு.. தமிழ்நாட்டிற்கு இது மிக சிறந்த வாரம்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏகப்பட்ட முதலீடுகள் குவிந்து உள்ளன. அதிலும் குறிப்பாக 4 முதலீடுகள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிக அளவில் குவிய தொடங்கி உள்ளன. கொரோனாவிற்கு பின் அதிக முதலீடுகளை பெற கூடிய மாநிலங்களில் முன்னிலையில் தமிழ்நாடு உள்ளது.
அதிலும் கடந்த 2 வருடங்களில் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட முதலீடுகள் குவிந்து உள்ளன. முக்கியமாக தொழிற்சாலைகள் பல தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகின்றன.

கடந்த ஒரு வாரம் தமிழ்நாட்டிற்கு மிக சிறப்பான வாரமாக அமைந்து உள்ளது. முக்கியமாக கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தொழில்துறை முதலீட்டுக்கான சிறந்த வாரம் கடந்த 7 நாட்கள்தான். இதில் ₹90,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் போடப்பட்டது அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு மாநிலங்களில் கையெழுத்தானது.
இதில் முதல் ஐந்து மாநிலங்கள்:
₹60,096 - தமிழ்நாடு
₹8,200 - அசாம்
₹7,218 - தெலுங்கானா
₹6,446 - குஜராத்
₹2,875 - உத்தரப் பிரதேசம்
கிட்டத்தட்ட தமிழ்நாடுதான் 70 சதவிகித முதலீடுகளை இதில் பெற்று உள்ளது. அந்த அளவிற்கு தமிழ்நாடு கவனம் பெற்றுள்ளது.
வடஇந்தியர்கள் பலரும் தமிழ்நாடு எப்படி முதலீட்டை ஈர்க்கிறது என்று சொல்லும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலினின் அரசில் அடுத்தடுத்து முதலீடுகள் குவிந்து வருகின்றன.
அதிலும் நான்கு முக்கியமான முதலீடுகள் கடந்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
முதலீடு 1 - தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கிறது. 2025ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் இருந்து வாகனங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதலீடு 2- ஜப்பானைச் சேர்ந்த மிட்டுபிஷி ( ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. 10 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளனர்.
முதலீடு 3 - தென்கொரியாவை சேர்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அவர்களின் கிளை நிறுவனமான கியா நிறுவனம் கடந்த முறை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்ய இருந்தது.
ஆனால் அதை தெலுங்கானா அரசு உள்ளே புகுந்து ஒப்பந்தம் செய்தது. இதனால் கடந்த ஆட்சியில் கியா தொழிற்சாலை சென்னைக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில்தான் அவர்களின் Hyundai நிறுவனம் தற்போது சென்னையில் முதலீட்டை விரிவுபடுத்த உள்ளது.
பெரும்பாலும் வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை Hyundai நிறுவனம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 11ம் தேதி இந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதற்காக முதலீடு செய்ய உள்ளது.

முதலீடு 4- அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இந்த உற்பத்தி ஆலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்றும், தொடக்கத்தில் 1,200 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ் தெரிவித்துள்ளார்.
இப்படி கடைசி வாரத்தில் தமிழ்நாடு மிக பெரிய நிறுவனங்களுடன் செய்த முதலீடுகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.,












Click it and Unblock the Notifications