ப்ளீஸ்.. வாங்க மக்களே.. அழைப்பு விடுத்த மாநகராட்சி.. ஸ்பீடு எடுத்த சென்னை.. விறுவிறு வாக்குப்பதிவு
சென்னையில் குறைவான வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாம்
சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் 3வது சுற்று வாக்குப்பதிவு குறைவாக பதிவானதாக கூறப்பட்ட சென்னைவாசிகளை வாக்களிக்கும்படி மாநகராட்சி அழைப்பு விடுத்திருந்தது.. இதையடுத்து வாக்குப்பதிவு தற்போது லேசாக சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது.. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை
இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று பொதுவிடுமுறை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குகள்
பொதுமக்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.. அதன்படி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்... எனினும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் 3.96% வாக்குகள் பதிவாகியிருந்தன..

குறைவு ஏன்
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் குறைவான வாக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் முதல் கட்ட சுற்றிலேயே தெரிவித்திருந்தது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.. அதேபோல, சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.. தமிழகத்தின் தலைநகரில் வாக்குப்பதிவு இவ்வளவு மந்தமாக இருக்க காரணம் தெரியவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வருமாறு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Recommended Video


வாக்கு சதவீதம்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் இது போலவே சென்னையில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியிருந்தது.. அதிலும் தமிழகத்தில் மிகக்குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில், கடைசி 5 இடங்களுமே சென்னையில்தான் இடம்பெற்றிருந்தது, அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.. தற்போது அதுபோலவே, இன்றைய 3 வாக்குப்பதிவு சுற்றிலும் சென்னை பின்தங்கி உள்ளது.. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுக்கு நேரமிருப்பதால், வாக்குப்பதிவு விறுவிறுப்பாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications