கட்சிக்காரர்கள் கஷ்டப்படனும்.. உங்களுக்கு சொகுசு கேரவனா? அண்ணாமலையை சீண்டும் காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் பணியாளர்கள் வெப்பத்திலும் மழையிலும் பாதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.. ஆனால் ஓய்வெடுக்க உங்களுக்கு சொகுசு கேரவன் வேண்டுமா? விளம்பரம் மட்டுமே முக்கியம் என்று அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' இன்று மாலை துவங்க உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். ராமேஸ்வரம் முதல் சென்னை வரை அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை இந்த பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.

Why Luxury Caravan to TN BJP Leader Annamalai on his Padayatra: Gayatri Raghuram Slams

அண்ணாமலை நடைபயணம் தான் மேற்கொள்கிறார் என்றாலும் ஒரு பிரத்யேக கேரவன் ஒன்றும் ரெடியாகியுள்ளது. அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது.

பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அண்ணாமலைக்காக பிரத்யேகமாக ரெடியாகியிருக்கும் இந்த கேரவன் குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு தலைவராக உங்கள் சொந்த பலத்தை காட்ட முடியாது, பாஜக வளர்ச்சியை காட்ட முடியாது, மாறாக மற்ற கட்சி தலைவர்களை உங்கள் பாவ யாத்திரைக்கு அழைக்கிறீர்களா? விளம்பரம் மட்டுமே முக்கியம். உங்கள் பணியாளர்கள் வெப்பத்திலும் மழையிலும் பாதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். காரியகர்த்தாக்கள் தள்ளு இழுத்தல், பாறைகள் மற்றும் சேற்றில் எல்லா முயற்சிகளிலும் நடக்க வேண்டும்.

ஆனால் ஓய்வெடுக்க உங்களுக்கு சொகுசு கேரவன் வேண்டுமா? விளம்பரம் மட்டுமே முக்கியம். என் மக்கள் என் மண் என்கிறீர்கள் ஆனால் 2024ல் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக உங்கள் யாத்திரை என்று சொல்கிறீர்கள். ஆனால் மணிப்பூர், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் மக்களின் பிரச்சனை என்று வரும்போது, விளம்பரம் மட்டுமே முக்கியம்.

ஏன் இரட்டை நிலை? இறுதியாக இது பாவ யாத்திரை, இது பாத யாத்திரை அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. இந்த யாத்திரை தமிழ் மக்களுக்காகவோ அல்லது நம் நாட்டிற்காகவோ அல்ல, இது விளம்பர யாத்திரை. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+