செங்கல்பட்டில் மங்கைக்கு 6வது டெலிவரி.. கருத்தடைன்னு டாக்டர் சொன்னதுமே.. ஒரு பெண் இப்படியா செய்வது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் பெருகுவது, பொருளாதாரத்துக்கு சிக்கலாகிவிடுகிறது. இதனை உணர்ந்துதான் உலக அளவில் பிறப்பு விகிதத்தைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.. இதையடுத்து, நம்முடைய நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. குறிப்பாக தென் மாநிலங்களில் எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளுக்கு பெரும்பலன் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.

2 மாதங்களுக்கு முன்னர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஒரு சம்பவம் நடந்தது.. மேல் ஆலாங்குப்பத்தை சேர்ந்த அமுதா என்ற கூலித்தொழிலாளி பெண்ணுக்கு 7 குழந்தைகள் இருக்கிறார்கள்..

Chengalpattu 6th delivery contraception

இதில் இரு குழந்தைகள் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்கள். தற்போது 5 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்..

அமுதா கர்ப்பம்

இப்போது அமுதா 8வது முறையாக கர்ப்பமானார். நிறைமாதம் காரணமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 8வது பிரசவம் என்று தெரிந்ததுமே அங்கிருந்த டாக்டர்கள், பிரசவம் முடிந்ததுமே, குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் தந்துள்ளனர்.
இதைக்கேட்டதுமே அதிர்ச்சியடைந்த அமுதா, பிரசவம் நடப்பதற்கு முன்பேயே, மருத்துவமனையை விட்டு வெளியே வந்துவிட்டார்.

அமுதா எஸ்கேப்

பிரசவ வார்டில் அமுதாவை காணாமல் பதறிப்போன நர்ஸ்களும், மருத்துவர்களும் மருத்துவமனை முழுவதிலும் தேடினார்கள். எங்கியுமே அமுதா கிடைக்காததால், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர்..

அவர்கள் அமுதாவின் வீட்டுக்கு உடனடியாக சென்றனர்.. சமூகத்தின் பொருளாதார நிலை பற்றியும், குடும்பங்களின் சூழல் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி தங்கள் குடும்பத்திற்கு தேவையானவைகளை மட்டும் கருத்தில் கொண்டு, குடும்ப கட்டுப்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்று அமுதா தம்பதிக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

இதற்கு பிறகு அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பிரசவத்துக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்ட மக்களின் கவனத்தை அப்போது பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

செங்கல்பட்டு மங்கை 6வது பிரசவம்

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தாம்பரத்தை அடுத்துள்ள சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்.. வேலூரை சேர்ந்த 33 வயதான ராஜ்குமார், கொத்தனரான வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் மங்கை.. 31 வயதான மங்கை, சோமங்கலம் பகுதியைசேர்ந்தவர்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி 15 வருடங்கள் முடிந்துவிட்டன.. 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.. இப்போது மீண்டும் 6வதாக மங்கை கர்ப்பமானார்.. நேற்று பிரசவத்திற்காக, தாம்பரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பப்பட்டார். அங்கு மங்கைக்கு 6வதாக ஆண் குழந்தை பிறந்தது.

குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன்

6 குழந்தைகள் பிறந்துவிட்டதால், குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று , மங்கையிடம் டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மங்கை, என்னாது ஆபரேஷனா? எனக்கு ஆபரேஷன் என்றாலே பயம் என்று சொன்னார்.. அதற்கு பிறகு மங்கையை காணவில்லை..

பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே தவிக்கவிட்டு திடீரென மாயமாகிவிட்டார்.. இதனால் காணாமல் போன மங்கையை மருத்துவமனை தரப்பினர் தேடி வந்தனர்.

கு.க. செய்ய பயம்

இதனிடையே, நேற்று மாலை மங்கை, தன்னுடைய சோமங்கலம் வீட்டுக்கு வந்துள்ளார்.. மனைவி வீட்டிற்குள் வந்து சேர்ந்ததுமே, அவரது கணவர் உடனடியாக தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தார்.. உடனே போலீசார் மங்கையிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் ஆபரேஷனுக்கு பயந்து ஓடிவிட்டதாக மங்கை சொல்லி உள்ளார்.

இதனிடையே தாயை பிரிந்து பச்சிளம் குழந்தை பால் கிடைக்காமல் மருத்துவமனையில் அழுது வந்துள்ளது.. அதுவரை குழந்தையை பாதுகாத்து வந்த மருத்துவர்கள், மங்கை தன்னுடைய வீட்டுக்கு திரும்ப வந்துவிட்டார் என்றதுமே, குழந்தையை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து மங்கையிடம் ஒப்படைத்தனர்.

6 குழந்தைகள் பெற்றும் கு.க. செய்ய மறுத்து, ஆபரேஷனுக்கும் பயந்து, தன்னுடைய தனது 6வது குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற இந்த தாயின் சம்பவம், தலைநகரின் கவனத்தை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+