விஜய் டிவியே ஷாக் ஆகற மாதிரி மிலாவை பிக்பாஸ் லிஸ்டில் சேர்த்த நம்மாளுங்க.. எல்லாமே வதந்திதானா?
சென்னை: நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என தகவல்கள் வெளிவந்த நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முன் தினம் தொடங்கியது. ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் சீசன் நடத்தும் போது நெட்டிசன்கள் வெளியிடும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் விஜய் டிவிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்.
எனினும் நெட்டிசன்கள் கெஸ் செய்யும் போட்டியாளர்கள் பட்டியலில் ஒன்றிரண்டு பேர் விஜய் டிவி செலக்ஷன் லிஸ்டில் இருப்பர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற நெட்டிசன்களின் பட்டியல் வெளியானது.

ஜிபி முத்து
அதில் குக் வித் கோமாளி கனி, பாபா பாஸ்கர், சுனிதா, ஜிபி முத்து, சலூன் கடை வைத்திருக்கும் தொழில் முனைவோர், இமான் அண்ணாச்சி, பிரியங்கா தேஷ் பாண்டே, மிலா (ஷகிலாவின் வளர்ப்பு மகள்) உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இவர்களில் போன் இல்லாமல் தன்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதால் இந்த போட்டியில் தான் கலந்து கொள்ளவில்லை என ஜிபி முத்து தெரிவித்திருந்தார். மிலா குறித்த புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

எபிசோடுகள்
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக மிலா இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வளர்ப்பு தாய் ஷகிலாவுடன் மிலா ஓரிரு எபிசோடுகளில் வந்திருந்தாலும் அவர் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். திருநங்கையரான அவர் ஷகிலாவின் அரவணைப்பில் வருவதற்கு முன்னர் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். இதனால் அவருக்கும் ரசிகர்கள் ஏராளம்.

பிரபலமடைந்த மிலா
இப்படி பிரபலமடைந்த மிலா உள்பட நிறைய பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் இல்லாமல் புதுமுகங்களாக இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸில் மிலா பங்கேற்காதது ஏன் என்பது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது எந்த அளவிற்கு உண்மை என்பது கூட தெரியவில்லை.

விதிமுறைகள்
அதாவது பிக்பாஸ் ஷோவுக்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி ஒரு சீசனில் ஒரே நேரத்தில் ஒரு திருநங்கையர் மட்டுமே போட்டியாளராக பங்கு பெற முடியுமாம். அந்த அடிப்படையில் மிலா மற்றும் தற்போது போட்டியாளராக உள்ள திருநங்கையர் நமிதா மாரிமுத்து ஆகியோரில் யார் சிறந்தவர்கள் என விஜய் டிவி ஆய்வு செய்ததாம்.

மாடல்
நடிகை, மாடல், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பன்முகத் திறமை வாய்ந்தவர் மிலா. அதே நேரத்தில் நமிதா மாரிமுத்துவும் மாடல் , நடிகை என்ற போதிலும் அவர் மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் விருதை பெற்றார். இது போல் மிஸ் கூவாகம், மிஸ் டிரான்ஸ்ஜென்டர் ஆப் இந்தியா உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார்.

நமிதா
எனவே மிலாவை விட நமிதாவுக்கே வாய்ப்பு கொடுக்கலாம் என விஜய் டிவி முடிவு செய்ததாம். அது போல் மிலாவும் பிக்பாஸில் பங்கேற்காததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதான் மிலா பிக்பாஸில் கலந்து கொள்ளாததற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல்!.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications