உஷார்.. இன்றுதான் மாரடைப்பு அதிகம் ஏற்படுமாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை.. தடுக்க என்ன செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் 85% பேர் உயிரிழப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சர்வதேச அளவில் ஏற்படும் மரணங்களில் 32% மாரடைப்பு தொடர்பானவை. பொதுவாக மாரடைப்பு எப்போது ஏற்படும் என்றே சொல்ல முடியாது என்பார்கள்.. அது உண்மை தான் என்றாலும், வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை தான் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மாரடைப்பு எப்போது நம்மைத் தாக்கும் என்பதே தெரியாது. மாரடைப்பால் பலரும் உயிரிழக்க இதுவே காரணமாகும். மாரடைப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே கோல்டன் ஹவர்ஸை இழந்துவிடுவோம். இதுவே மாரடைப்பு ஏற்படப் பிரதானக் காரணமாக இருக்கிறது.

health heart attack doctor

இன்று தான் ஆபத்து அதிகம்

முக்கியமான கரோனரி தமனியில் முழு அடைப்பு ஏற்படும்போது, STEMI எனப்படும் தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது. பல ஆய்வுகளின்படி, வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை தான் அன்று STEMI மாரடைப்பு விகிதங்கள் அதிகமாக இருக்கிறதாம். அது ஏன் திங்கள்கிழமை.. இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

காரணங்கள் என்ன?

முதல் காரணம் மன அழுத்தம்.. நீங்கள் அறியவில்லை என்றாலும் கூட வீக் எண்ட் முடித்துவிட்டு திங்கள்கிழமை வேலைக்குத் திரும்பும் போது நமக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இது மாரடைப்புக்கான ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்து மது.. வார இறுதி நாட்களில் பலரும் அதிக அளவில் மது அருந்துகின்றனர். இது ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

அதேபோல உணவுமுறையும் முக்கிய காரணமாக இருக்கிறது.. வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பார்ட்டி செய்யும்போது அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், டிரான்ஸ் ஃபேட்ஸ் உணவுகளை நாம் சாப்பிடுவோம். இதுவும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். அதேபோல பயணமும் கூட ஒரு காரணமாக இருக்கிறது. திங்கள்கிழமை காலை போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, மன அழுத்தம் என எல்லாம் சேர்ந்து இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

இன்னொரு ஆபத்து

அதேநேரம் திங்கள்கிழமை மட்டுமே உங்கள் இதயத்திற்கு டேஞ்சர் இல்லை.. டிசம்பர் கடைசி வாரத்திலும் கூட மாரடைப்பால் பலர் உயிரிழப்பதாக அமெரிக்க மருத்துவச் சங்கம் தெரிவிக்கிறது. டிசம்பர் கடைசி வாரம் கூட கிறிஸ்துமஸ், புத்தாண்டு என லாங் வீக் எண்ட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வழக்கமான நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டால் அது இதயச் சம்பந்தமான பிரச்சனைகளின் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

மாரடைப்பின் அறிகுறிகள்

நெஞ்சு வலி அல்லது நெஞ்சில் கடும் அழுத்தம், குமட்டல் மற்றும் வாந்தி, கை அல்லது தோள்பட்டையில் அசௌகரியம், முதுகு, கழுத்து மற்றும் தாடை வலி, மயக்கம் அல்லது பலவீனம், மூச்சுத்திணறல் ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறிகுறிகள் மாறுபடும். பெண்களுக்குக் குமட்டல், வாந்தி, மூச்சுத்திணறல் மற்றும் முதுகு அல்லது தாடை வலி போன்ற அறிகுறிகள் லேசாக இருக்கும். உங்களுக்கும் அல்லது உங்களைச் சுற்றியுள்ள நபருக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே சரியாக இருக்கும்.

தடுக்க என்ன செய்யலாம்?

இந்தியாவில் மாறி வரும் வாழ்க்கை முறையால் 40% க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதய நோய் ஆபத்தைக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கச் சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. சத்தான மற்றும் சமச்சீர் உணவு உட்கொள்வது, புகைபிடிப்பதை நிறுத்துவது, உடல் எடையைப் பராமரிப்பது, மது அருந்துவதை நிறுத்துவது, ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது ஆகியவற்றைச் செய்தாலே போதும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+