சீமான் தாடி வளர்ப்பது ஏன் தெரியுமா? பின்னணியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிய வார்த்தை!சுவாரசியம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று தனது ‛கெட்டப்பை' மாற்றி உள்ளார். எப்போதும் ‛க்ளீன் ேஷவ்' செய்து இருக்கும் சீமான் இப்போது முகத்தில் தாடி வளர்த்துள்ளார். இந்த மாற்றத்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிய வார்த்தை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்ய திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது.

ஆனால் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது பிரிந்துள்ளன. இருகட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைக்க பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. ஆனால் இந்த கட்சிகளிடம் இருந்து நாம் தமிழர் கட்சி முற்றிலும் மாற்றுப்பாதையில் செல்கிறது.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே தேர்தலை சந்தித்து வருகிறது. இதுவரை சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் நாம் தமிழர் வெற்றி பெறாமல் இருந்தாலும் கூட தொடர்ந்து தனித்தே களம் கண்டு வருகிறது. அந்த வகையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
குறிப்பாக சில தொகுதிகளில் வேட்பாளர்களின் பெயரை கூட அவர் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தான் சீமானிடம் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். பொதுவாக சீமான் எப்போதும் ‛க்ளீன் ேஷவ்' செய்த முகத்துடன் தான் காட்சியளிப்பார். ஆனால் இப்போது அவர் தனது முகத்தில் தாடி வளர்க்க தொடங்கி உள்ளார். மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர் அதிகளவில் தாடி வளர்த்து வருகிறார்.
இந்த மாற்றத்துக்கு பின்னணி காரணம் என்ன? என்பது பற்றி சீமான் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது ‛தந்தி டிவிக்கு' சீமான் பிரத்யேக நேர்க்காணல் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவரது முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு சீமான் பதிலாக கூறியதாவது:

‛‛ஒரு படத்தில் நடிக்க வேண்டி உள்ளது. இன்னும் அந்த படத்துக்கு பெயர் வைக்கவில்லை. தம்பி விக்னேஷ் சிவன் கேட்டு கொண்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றம் என்று கூறினார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தாடி வளர்க்க வேண்டும் என்றார். சரி வளர்ப்போம் என்று வளர்த்து வருகிறேன்'' என்றார்.
அதாவது தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து அரசியலில் நுழைந்தவர் சீமான். இப்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரான பிறகு சீமான் திரைத்துறையில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக பயணப்பட்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் மீண்டும் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதற்காக முகத்தில் தாடி வளர்த்து வருவது உறுதியாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications