ஆஹா! தேசிய அளவில் காற்று மாறுதே! ஸ்டாலின் சொன்ன நேஷனல் பிளான்! ஒன்று சேரும் பெரும் தலைகள்! ட்விஸ்ட்
சென்னை: தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் வகுத்து கொடுத்த திட்டம் ஒன்றிற்கு தற்போது எதிர்க்கட்சிகள் இடையே வரவேற்பு கிடைக்க தொடங்கி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் தனது பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம்.

காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது.
தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம் என்று மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார்.
கூட்டணி:
ஆனால் தேசிய அளவில் கூட்டணி சாத்தியமா? எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக கைகோர்க்குமா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில்தான் திடீரென எதிர்கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ் குமார் திடீரென இறங்கி உள்ளார்.
ஸ்டாலினின் பேச்சை வழிமொழியும் விதமாக தேசிய அளவில் கூட்டணி ஒன்று உருவாக்கிக்கொண்டு இருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறி உள்ளார்.
சமீபத்தில் டெல்லி சென்ற நிதிஷ் குமார், நான் டெல்லியில் தங்கியிருந்த போது பல எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தேன்... அனைவரும் ஒரே குரலில் பேசுகிறார்கள்.. கூட்டணிக்கான பேச்சுக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. தேசிய அளவில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கூட்டணி அமைக்க நாங்கள் பேசி வருகிறோம். பாஜக அல்லாத தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது... எதிர்காலத்திலும் பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறி உள்ளார்.
அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கூட்டணிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். தேசிய அளவில் ஆளுநர்களுக்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த இரண்டு முக்கியமான திட்டங்களுக்கு தேசிய அளவில் ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது பாஜகவை திரும்பி பார்க்க வைத்து உள்ளது.

இன்றும் மீட்டிங்:
இந்த நிலையில்தான் தற்போது நிதிஷ் குமார் இன்னொரு பக்கம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு நடத்த உள்ளார். இன்று இருவருக்கும் இடையில் சந்திப்பு நடக்கிறது. மூடிய அறையில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
தேசிய அளவில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். இன்று இந்த சந்திப்பில் மிக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம்தான் அகிலேஷ் யாதவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் மம்தா பானர்ஜி இதேபோன்ற சந்திப்புகளை நடத்தினார்.

இந்த சந்திப்பில் எல்லாம் தேசிய அளவிலான கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications