அதிமுகவே வேண்டாம்.. கிட்ட கூட வராத பாமக, தேமுதிக! முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா? அப்போ எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவிற்கு ஆதரவாக கூட்டணி அமைக்க யாரும் வரவில்லை. அதிமுகவிற்கான தேர்தல் இது கிடையாது. அவர்கள் அதிக இடம் எடுப்பதால் அவர்களை யாரும் விரும்பவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆலோசனை செய்ய தொடங்கி 10 நாட்கள் ஆகியும் கூட இதுவரை எந்த பெரிய கட்சியும் அதிமுகவுடன் ஆலோசனை செய்ய முன்வரவில்லை.

Why No one is interested in AIADMK alliance for the Lok Sabha 2024 election?

லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

முக்கியமாக தேமுதிக, பாமக இரண்டும் அதிமுக கூட்டணி உடன் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் இதுவரை அதிமுகவிடம் நேரடியாக ஆலோசனை செய்யவே இல்லை.

பேட்டி: கூட்டணி அமைக்க அதிமுக இப்படி திணறுவது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு கட்சிகள் மாறி மாறி ஆலோசனைகள் நடத்திவருகிறது. ஒரு சீட்டு வாங்கும் கட்சிகள் பாஜகவுடன்தான் சேரும். பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியையே விரும்பும். ஏனென்றால் அதிமுக அதிக இடங்களை கொடுக்காது. பாஜக கூட்டணியில் இருந்தால் அதிக இடங்கள் கிடைக்கும்.

அதனால் பெரும்பாலும் இந்த கட்சிகள் பாஜகவுடன்தான் செல்லும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளன. அதனால் அமைச்சர் பதவி கூட கிடைக்கும். இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி அமைக்க பார்க்கிறது. அதிமுகவிற்கு ஆதரவாக யாரும் வரவில்லை. அதிமுகவிற்கான தேர்தல் இது கிடையாது. அவர்கள் அதிக இடம் எடுப்பதால் அவர்களை யாரும் விரும்பவில்லை.

கூட்டணி குழப்பம்; எல்லாம் போக அதிமுக இதுவரை எத்தனை இடங்களில் நிற்கும், கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை வலிமையாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதோடு கொங்கு மண்டலத்தில் பாஜக வாக்குகளை பிரிக்கும். இதனால் அதிமுகவிற்கு எதிராக எல்லாம் மாறும். கொங்கு மண்டலத்திலேயே அதிமுக வெல்லும் வாய்ப்புகள் இல்லை. அங்கே பாஜக வாக்குகளை பிரிக்கும்.

இது போக இன்னொரு பக்கம் தென் மண்டலத்தில் அமமுக வாக்குகளை பிரிக்கும். டெல்டா, வடக்கில் திமுக வலுவாக உள்ளது. இதனால் அதிமுகவிற்கான வெற்றிவாய்ப்பு மிக குறைவாக உள்ளது. அதிமுகவிற்கு வெற்றிக்கான சாதகமான சூழ்நிலை உள்ளது. இதனால் பாஜக கூட்டணிக்கு அதிமுக திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதிமுக- பாஜக மீண்டும் சேரவே சேராது என்று சொல்ல முடியாது. அதற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது.

ஒருவேளை அதிமுக மீண்டும் வந்தால் கூட பாஜகவிற்கே அது சாதகமாக மாறும். அதிமுக தனியாக வெற்றிபெற முடியாத சூழல் உள்ளது. இதனால் அதிமுக தனித்து விடப்பட்டு வருகிறது. அதிமுக - பாஜக இப்படி எதிரணி வாக்குகளை பிரிப்பதால்.. திமுகவிற்கு சாதகமாக மாறும். 2026ல் விஜய் வேறு வருவார். அப்படி இருக்க பாஜக இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளும்.. என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக இப்போது குழப்பமான சூழலில் இருக்கிறது. அவர்கள் தனியாக போனால் அது அரசியல் தற்கொலைக்கு சமமாக மாறும், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+