பயணிகளுக்கு செம ஷாக்.. திடீரென இடிக்கப்படும் சென்னை ஏர்போர்ட் டி4 முனையம்.. உண்மையில் என்ன காரணம்
சென்னை: சென்னை ஏர்போர்ட்டின் பழைய சர்வதேச முனையத்தை இடிக்கும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.இது ஏர்போர்ட் மறுசீரமைப்பில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகச் சென்னை ஏர்போர்ட் இருக்கிறது. நாட்டில் அதிக பயணிகளைக் கையாளும் விமான நிலையங்களில் சென்னை 5ஆவது இடத்தில் இருக்கிறது.

இருப்பினும், சென்னை ஏர்போர்ட் குறித்த விமர்சனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்தே வந்தது. இந்தச் சூழலில் தான் சென்னை ஏர்போர்ட்டை மறுசீரமைக்கும் பணிகள் இப்போது ஆரம்பித்துள்ளது.
ஏர்போர்ட்: சென்னை ஏர்போர்ட்டில் அனைத்து விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து தான் செயல்பட்டு வருகிறது. அதேநேரம் அங்கே பணிகளும் தொடர்ந்து நடந்தே வருகிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் புதிய ஒருங்கிணைந்த முனையம் முழுவதும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஏர்போர்ட்டை இப்போது ₹2,467 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏர்போர்ட்டின் இரண்டாவது உள்நாட்டு முனையத்தையும் வரும் அக்டோபர் 29ஆம் தேதி திறக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அப்பகுதியில் பணிகள் நிறைவடையாத நிலையில், அது நவ. இரண்டாம் வாரத்தில் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இடிக்கும் பணிகள்: மேலும் சென்னை ஏர்போர்ட் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக முன்பு சர்வதேச விமானங்களைக் கையாண்டு வந்த டி3 முனையத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், "விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகப் பழைய டெர்மினல்களை இடித்துவிட்டு, புதிய ஒருங்கிணைந்த முனையத்தைக் கட்ட திட்டமிட்டோம்.. ஏற்கனவே பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. புதிய ஒருங்கிணைந்த முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், அது செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது. ஆனாலும், அங்கே அடுத்தாண்டு இறுதியில் தான் பணிகள் முழுமையாக நிறைவடையும்.
பிளான் என்ன: இப்போது பழைய டி3 முனையத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். பழைய முனையம் இடிக்கப்பட்ட பிறகு, புதிய ஒருங்கிணைந்த கட்டிடத்தின் அடுத்த பாதியை ஒப்ந்ததாரர்கள் கட்டுவார்கள். அது முழுமையாக நிறைவடைய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும்" என்று அவர் தெரிவித்தார்.
சென்னை ஏர்போர்ட்டில் பீக் ஹவர்ஸில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே கூட்டத்தைக் குறைக்க உள்நாட்டு விமானங்களை டி4 முனையத்தில் இருந்து இயக்க திட்டமிட்டது. இந்த டி4 முனையம் ஜூலை மாதமே திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இன்னும் இது திறக்கப்படவில்லை. சில வாரங்கள் வரை இதற்கு ஆகலாம் என்று கூறப்படுகிறது.
முக்கியம்: சென்னை ஏர்போர்ட்டை பொறுத்தவரைக் கடந்த மாதம் மட்டும் இங்கிருந்து 16.98 லட்சம் பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 12.36 லட்சம் பேர் உள்நாட்டு விமானச் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை அதிகாலையில் விமானத்தில் பயணிப்போர் அதிகம். இதனால் அப்போது ஏற்படும் கூடுதல் நெரிசலைத் தவிர்க்கவே டி4 முனையத்தைச் சீக்கிரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர விமான நிலைய அதிகாரிகள் முயல்கிறார்கள்.
டி4 முனையம் ரெடியானதும் ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா விமானங்களின் டி4இல் இருந்து இயக்கப்படும். மற்ற விமானங்கள் வழக்கம் போல டி1 முனையத்தில் இருந்தே இயங்கும். இது பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications