ஓபிஎஸ் டெய்லி பேசுறாராமே! "சாணக்கியர்" கேம்! 2026 வரை அசைக்க முடியாது! டென்ஷனில் போன்போட்ட எடப்பாடி
சென்னை: அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் ஓபிஎஸ் நியமித்தார். அப்போதிலிருந்து தினமும் இரண்டு முறை பண்ருட்டியாரிடமும் விவாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரே ஒரு வழக்கு மட்டுமே நடப்பது போல தோன்றலாம். ஆனால் உள்ளே பல மோதல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
முக்கியமாக எடப்பாடி ஒரு பக்கம் பல்வேறு மீட்டிங்குகளை போட்டுகொண்டு இருக்கிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் தொடர்ந்து ஆலோசனைகளை செய்து வருகிறார்.
ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்யும் நபர்களில் முக்கியமானவர் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவரிடம் கிட்டத்தட்ட தினமும் ஓபிஎஸ் ஆலோசனை செய்து வருகிறாராம்.

ஆலோசனை
இவர்கள் இருவரும் தமிழகம் டூ டெல்லி வரையிலான பல்வேறு அரசியல்களை விவாதிக்கின்றனர். சிக்கலான பிரச்சனைகளில் எம்.ஜி.ஆர். காலத்தில் எடுக்கப்பட்ட பல சம்பவங்களை ஓபிஎஸ்சுக்கு எடுத்துச் சொல்கிறாராம் பண்ருட்டியார். இதனால் ஓபிஎஸ் முகாமில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முக்கியமான உத்தரவு வந்தது. இது ஓ பன்னீர்செல்வத்திற்கு கொஞ்சம் சாதகமான உத்தரவு.

ஓ பன்னீர்செல்வம்
அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு தடை விதித்து வழக்கை நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்து விட்டது உச்சநீதிமன்றம். இந்த இடைக்கால உத்தரவு எடப்பாடி தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், இறுதி தீர்ப்பில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எடப்பாடிக்கு மூத்த வழக்கறிஞர்கள் கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, என்னதான் இறுதி தீர்ப்பு என ஒன்று இருந்தாலும் எடப்பாடி சற்று கலக்கமாகத்தான் இருக்கிறார் என்கிறார்கள். இப்போது வந்து தீர்ப்பு கொஞ்சம் அவருக்கு கலக்கத்தை கொடுத்து உள்ளதாம்.

பின்னடைவு
மேலும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக டெல்லி தரப்பிலோ அல்லது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தரப்பிலோ பண்ருட்டியார் ஏதேனும் முயற்சித்திருக்கிறாரா? என்பதை அறிய தனது டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபடி இருக்கிறாராம் எடப்பாடி. இந்த நிலையில், இடைக்கால உத்தரவு தங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் அது குறித்து பண்ருட்டியாரிடம் நேற்று இரவு ஓபிஎஸ் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது, ''இறுதி தீர்ப்பும் இப்படித்தான் அமையும். 2026 வரை உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

பண்ருட்டியார்
இருவரும் இணைந்து பொதுக் குழுவைக் கூட்டி அப்போது கட்சியின் சட்டவிதிகளை மாற்றியமைத்தால் மட்டுமே அதனை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும். அதுவரை ஏற்கனவே ஆணையத்தால் ஏற்கப்பட்டவைகள் தான் செல்லும். அதனால், கவலைப்படத் தேவையில்லை. மாவட்ட செயலாளர்களை நியமித்து வருவதை தொடருங்கள். உங்களால் நியமிக்கப்படும் மா.செ.க்களிடம் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க வலியுறுத்தி அது குறித்த பட்டியலை நீங்கள் வாங்கி அதனை வெளியிடுகிற வேலையை கவனியுங்கள்'' என்று அறிவுறுத்தியுள்ளார் பண்ருட்டியார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications