சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி குடும்பத்தை இறக்கிட்டாரு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்.. பாதியில் காணாமல் போன "புக்".. பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எடப்பாடி - ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்.. இரண்டு முக்கியமான வழக்குகளை தொடுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு முயன்று வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    ADMK-வில் செல்வாக்கை காட்ட OPS திட்டம்... ஆதரவாளர்களை சந்திக்க முடிவு | Politics

    அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். வரும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட உள்ளது.

     மகாராஷ்டிரா அரசியல்.. உத்தவ் தாக்கரேவின் ட்விஸ்ட்.. மனைவி மூலம் பேச்சுவார்த்தை..! மகாராஷ்டிரா அரசியல்.. உத்தவ் தாக்கரேவின் ட்விஸ்ட்.. மனைவி மூலம் பேச்சுவார்த்தை..!

    இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் இருந்த ஓ பன்னீர்செல்வம் செல்வம் அங்கு பாஜக தலைவர்களிடம் இது பற்றி பேசி இருக்கிறார்.

    இரண்டு வழக்கு

    இரண்டு வழக்கு

    இந்த நிலையில் டெல்லியில் இருந்து திரும்பி வந்த ஓபிஎஸ் இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது. ஒன்று நிர்வாகிகளை மீண்டும் தன் பக்கம் அணி திரட்டுவது. இதற்காக இன்று அவர் மதுரை செல்கிறார். பின்னர் தென் மாவட்டங்கள் முழுக்க அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதோடு இரண்டு விதமான வழக்குகளை ஓ பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இரண்டாவது வழக்கு என்ன?

    இரண்டாவது வழக்கு என்ன?

    முதல் வழக்கு.. எல்லோரும் எதிர்பார்த்தது போல ஜூலை 11 பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு. ஜூலை 11 பொதுக்குழு கூடுவதாக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் இதற்கு கையெழுத்து போடவில்லை என்பதால் இதை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுக்க இருக்கிறாராம். இன்னொரு வழக்கு.. கடந்த பொதுக்குழு அதிகாரபூர்வமற்றது என்று உத்தரவிட கோரி வழக்கு தொடுக்கப்படும் என்கிறார்கள்.

    தவறு

    தவறு

    அதாவது கடந்த பொதுக்குழுவில் சில நிர்வாகிகள் பாஸ் இல்லாமல் கூட்டத்திற்கு வந்தனர். அதாவது உண்மையான பொதுக்குழு உறுப்பினர் பாஸை கலர் ஜெராக்ஸ் அடித்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்தனர். அதோடு பொதுக்குழுவில் இவர்கள் வந்த குறிப்பிட்ட 1 மணி நேரம் மட்டும் அங்கு வருகை பதிவேடு புக் இடம்பெறவில்லை. இவர்கள் மட்டும் கையெழுத்து போடாமல் கூட்டத்திற்கு வந்துள்ளனர். இடையில் ஒரு மணி நேரம் வருகை பதிவேடு புக் காணவில்லை.

    பாதியில் காணாமல் போன புக்

    பாதியில் காணாமல் போன புக்

    பின்னர் ஏதோ மோசடி நடக்கிறது.. எடப்பாடி ஆதரவாளர்கள் மோசடி செய்கிறார்கள். தங்கள் ஆட்களை உள்ளே இறங்குகிறார்கள் என்று ஓபிஎஸ் தரப்பினர் புகார் வைத்தனர். அதன்பின்பே ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வேண்டுகோளின் படி மீண்டும் வருகை பதிவேடு புத்தகம் வைக்கப்பட்டது. ஆனால் இடைப்பட்ட நேரத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் உள்ளே சென்றதாக ஓபிஎஸ் தரப்பு புகார் வைத்தது. இந்த நிலையில் இதை காரணம் காட்டி கடந்த பொதுக்குழுவை அதிகார்பூர்வமற்றது என்று அறிவிக்க கோர்ட்டை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

    எல்லாமே தவறு

    எல்லாமே தவறு

    எடப்பாடி தனது ஜாதி ஆட்களை.. தனது உறவினர்களை, குடும்பத்தினரை உள்ளே இறக்கிவிட்டார்.. இந்த பொதுக்குழு விதிப்படி நடக்கவில்லை. அதனால் அந்த பொதுக்குழுவை அதிகாரபூர்வமற்றது என்று அறிவிக்க வேண்டும். அதில் அறிவிக்கப்பட்ட அவைத் தலைவர் தீர்மானத்தையும் நிராகரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு மனு கொடுக்க இருக்கிறதாம். இந்த பாயிண்டை வைத்து பொதுக்குழுவில் கடந்த முறை நடந்த விஷயங்கள் அனைத்தையும் அதிகாரபூர்வமற்றது என்று அறிவிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

    English summary
    Why O Pannerselvam will go for two long legal battles against Edappaadi Palanisamy in AIADMK?அதிமுகவில் எடப்பாடி - ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்.. இரண்டு முக்கியமான வழக்குகளை தொடுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு முயன்று வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X