2 மாசம்தான்.. இதனால்தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் 1.. சிலிர்க்க வைத்த சென்னை.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று நடந்த சம்பவம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கியா நிறுவனம் முதலீடு செய்யாமல் ஒதுங்கியது. கியா முதலீட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எவ்வளவோ முயன்றது. ஆனால் அப்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் குவியவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரிதாக நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் அப்போது மிக முக்கியமான முதலீடான கியா முதலீட்டை தமிழ்நாடு இழந்தது. இது தமிழ்நாட்டிற்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஏனென்றால் அப்போது தமிழ்நாடு - தெலுங்கானா - கர்நாடகா இடையே மிகப்பெரிய முதலீட்டு யுத்தம் நடைபெற்றது.
அந்த யுத்தத்தில் தமிழ்நாடு அப்போது பின்னோக்கி சென்றது. அதிலும் கியா முதலீட்டை ஹைதராபாத் தட்டி தூக்கியது. ஆட்டோமொபைல் தலைமையிடமாக இருந்து கொண்டு தமிழ்நாடு கியா முதலீட்டை பெற முடியாதது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இப்போது அதே கியா குழுவில் உள்ள ஹூண்டார் நிறுவன முதலீட்டை தமிழ்நாடு பெறுகிறது. கியா - ஹூண்டாய் எல்லாம் ஒரே குழுமம்தான். இரண்டுமே தென்கொரியாவை சேர்ந்த குழுமம்தான்.கியா தமிழ்நாடு வேண்டாம் என்று 4 வருடங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், அவர்களையே தற்போது தட்டி தூக்கி ஹூண்டாய் முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அப்போது இழந்த மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை தற்போது தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து கொண்டது.
ஆட்டோமொபைல்: ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி மின்னணு சாதனங்கள் துறையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் புதிய உயரத்தை தொட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. இது போக மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி, மகாராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. உதாரணமாக தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் உற்பத்தியை செய்ய இருக்கிறது.
இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் 12 மாடலை மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த போனில் இனி மேட் இன் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். . கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
ஒம்ரான்: இப்படி மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் கலக்கி வரும் சென்னை இன்னொரு சாதனையை படைத்துள்ளது. அதன்படி சென்னையில் ஒம்ரான் நிறுவனம் உற்பத்தியை தொடங்கி உள்ளது. இவர்கள்தான்உலகின் நம்பர் மருத்துவ எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
128 கோடி ரூபாய்க்கு இவர்கள் பிளான்ட் ஒன்றை மஹிந்திரா ஓர்கினிசில் பொன்னேரியில் தங்கள் பிளாண்ட்டை அமைத்து உள்ளனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம்தான் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 மாதங்களில் இங்கே உற்பத்தி தொடங்கி உள்ளது.
மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகாராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ள நிலையில் தமிழ்நாடு இவ்வளவு வேகமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது கவனம் பெற்றுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications