திடீர்ன்னு செம கோபம்.. சீறிய இபிஎஸ்.. ஸ்கெட்ச் "இவருக்கா" இல்லை "அவருக்கா".. என்னதான் நடக்குது?!
சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிராக திடீரென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் அறிக்கைக்கு பின் வேறு சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பை ஏற்றபின் திமுக அரசு கொஞ்சம் கொஞ்சமாக முந்தைய அரசின் குற்றங்களை தூசு தட்ட தொடங்கி உள்ளது. முந்தைய ஆட்சியில் செய்த முறைகேடுகள், ஊழல்கள் என்று பல விஷயங்களை தமிழ்நாடு அரசு தூசு தட்ட தொடங்கி உள்ளது.
பல்வேறு மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடுகளை தமிழ்நாடு அரசு விசாரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே மாஜி அமைச்சர் மணிகண்டன் போன்றவர்கள் மற்ற புகார்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

என்ன
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அதிமுகவை அடக்க பார்க்கிறது என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், ஆட்சிக்கு எதிராக நாகரீகமாக விமர்சனம் வைப்பவர்களை கூட அரசு கைது செய்கிறது. காவல் துறையினரை ஏவி வழக்குத் தொடுப்பது, கட்சியினரை விட்டு மிரட்டுவது போன்ற திமுகவினருக்கே உரித்தான, அடிப்படையான செயல்களைப் பார்க்கும்போது, திமுகவினர் இன்னும் மாறவில்லை என்று தெரிகிறது.

தொழில்நுட்ப
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிமுகவிற்கு எதிரான அடக்குமுறையை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று காவல் துறையின் மூலம் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்டு, தற்போது கட்சித் தொண்டர்களால் எஃகுக் கோட்டையாகப் பாதுகாக்கப்படும் கட்சிக்கு எதிரான அடக்கு முறையை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வல்லமை
திமுக அரசின் இந்த அடக்குமுறையினையும், பொய் வழக்குகளையும் சட்ட ரீதியாகச் சந்திக்கக்கூடிய வல்லமை அதிமுகவிற்கு உள்ளது, என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு எதிரான ஸ்கெட்ச் போல எடப்பாடி பழனிசாமி கோபமாக பேசி இருந்தாலும் இவரின் அறிக்கைக்கு பின் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதிமுகவின் தலைமை "இப்போதும்" வலுவாக இருக்கிறது என்பதை தொண்டர்களுக்கு உணர்த்தும் கடிதம் இது என்கிறார்கள்.

கடிதம்
புதிய அரசு பொறுப்பேற்ற பின் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் தூசி தட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைமை உங்களை காக்காது, திமுக அரசு வழக்கு தொடுத்தால் அதிமுக கட்சி தலைமை உங்களுடன் நிற்காது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் நிறைய கருத்துக்கள் உலவி வந்தன. இது சசிகலாவுக்கு ஒரு வகையில் ஆதரவாகவும் சென்றது. சசிகலா வந்தால் மட்டுமே தொண்டர்களை, முன்னாள் அமைச்சர்களை காக்க முடியும் என்றும் நிறைய விவாதங்கள் நிலவின.

சசிகலா
சசிகலாவும் பல்வேறு ஆடியோக்களில், தற்போது அதிமுகவில் தலைமை வலுவாக இல்லை. நான் வலுவான தலைமையை கொடுப்பேன். கட்சியை வலுவாக காப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இபிஎஸ் - ஓபிஎஸ் வலுவாக இல்லை, அவர்களால் கட்சியை காக்க முடியாது என்று சசிகலா பல இடங்களில் பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் கட்சியினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக எடப்பாடி அறிக்கை வெளியாகி உள்ளது.

அறிக்கை
எந்த இக்கட்டான நிலையிலும் கட்சி உங்களுடன் இருக்கும், திமுக அரசுக்கு அதிமுக பயன்படாது என்று தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்குகள், புகார்களில் யாரும் பயந்து திமுக அல்லது சசிகலா பக்கம் தாவி விடாமல் தடுக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

பயம்
திமுக அரசு வழக்கு போட்டால் அதை அதிமுகவின் சட்ட குழு எதிர்த்து போராடும். எல்லா வழக்கிலும் துணை நிற்போம் என்று இபிஎஸ் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள், தொண்டர் முன் நாம் வீக்காக இருக்க கூடாது, இதை பயன்படுத்தி சசிகலா அதிமுகவிற்கு வர முயற்சிக்க கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

தகவல்
இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையின் மொத்த போகஸ் சசிகலாதான் என்கிறார்கள். சசிகலாவிற்கு கீழ் யாரும் செல்லாமல் தடுப்பதற்கே இப்படி ஒரு வலுவான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். தலைமை இன்னும் ஸ்டிராங்காக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அளிக்கும் மெசேஜ்தான் இது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications