சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்படி முடிவு எடுத்தீங்க? தேர்தல் ஆணையத்தின் பளீர் "மூவ்".. ஓபிஎஸ் ஹாப்பி! குழம்பிப் போன எடப்பாடி!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையம் இன்று நடத்தும் கூட்டத்திற்கு அதிமுகவின் இரு கோஷ்டிகளுக்கும் அழைப்பு சென்று இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது. இதற்கான கூட்டம் தலைமை செயலகத்தில் தற்போது துவங்கி உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரிசையாக பல்வேறு பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணைய கூட்டம்! அருகருகே அமர்ந்த இபிஎஸ், ஓபிஎஸ் டீம்! செம ட்விஸ்ட்! தொடங்கிய முக்கிய மீட்டிங்தேர்தல் ஆணைய கூட்டம்! அருகருகே அமர்ந்த இபிஎஸ், ஓபிஎஸ் டீம்! செம ட்விஸ்ட்! தொடங்கிய முக்கிய மீட்டிங்

கூட்டம்

கூட்டம்

அதிமுகவின் இரு கோஷ்டிகளுக்கும் அழைப்பு தந்திருக்கிறது ஆணையம். எடப்பாடி அணி சார்பில் ஜெயக்குமார், பொள்ளாட்சி ஜெயராமன் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஓபிஎஸ் அணி சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்ள வந்துள்ளார். இரு அணி பிரதிநிதிகளுக்கும் அருகருகே இருக்கை போடப்பட்டுள்ளது.

ஏஐஏடிஎம்கே

ஏஐஏடிஎம்கே

ஏஐஏடிஎம்கே என்று ஒரு போர்டு வைக்கப்பட்டு மூன்று பேரும் அருகருகே அமரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் ஆளாக ஓபிஎஸ் அணி சார்பில் கோவை செல்வராஜ் வந்து இருக்கையில் அமர்ந்துவிட்டார். இதையடுத்து எடப்பாடி அணி சார்பில் ஜெயக்குமார், பொள்ளாட்சி ஜெயராமன் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். செல்வராஜ் அருகே இருந்த போர்டை ஜெயக்குமார் தனது பக்கம் நகர்த்திவிட்டு அமர்ந்தார்.இவர்கள் மூவரும் அருகருகே அமர்ந்து உள்ளனர். இருப்பினும் இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

பார்க்கவில்லை

பார்க்கவில்லை

இந்த கூட்டம் தொடர்பாக முதலில் அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பிதழை அனுப்பியது. அலுவலகம் எடப்பாடி கட்டுப்பாட்டில் இருப்பதால், அது எங்களுக்கு வந்த அழைப்பு என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது. இதனால் எடப்பாடி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது போல் ஆகிவிடும் .இதையடுத்து எங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதால் எங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இன்று தேர்தல் ஆணைய ஆலோசனையில் அதிமுக சார்பாக 2 அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உள்ளனர். அதிமுக பிளவுப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அதிமுக பிளவுப்பட்டிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் முடிவெடுத்து, இரு அணிகளுக்கும் அழைப்பு விடுத்தது ?

எடப்பாடி

எடப்பாடி

தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததா? அல்லது மாநில அரசு தூண்டுதலில் முடிவு எடுத்ததா? என்று எடப்பாடி ஆதரவு அதிமுக வழக்கறிஞர்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். முதலில் எடப்பாடி தரப்பிற்கு மட்டும் கடிதம் அனுப்பிவிட்டு பின்னர் ஓபிஎஸ்ஸுக்கும் அனுப்பியது ஏன்? இதற்கு பின் நடந்தது என்ன என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

Recommended Video

    OPS - EPS பிரச்சனைய பாஜக தீர்த்துவைக்கலாமா? *Voxpop
    ஹாப்பி

    ஹாப்பி

    இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்போ இதனால் குஷியில் இருக்கிறது. பார்த்தீர்களா.. அதிமுகவில் இன்னும் ஓபிஎஸ் தரப்பு இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் எங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது. எடப்பாடி எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பது உறுதியாகிறது. தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவும் இப்படித்தான் இருக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஹாப்பியாக கருத்து தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த "மூவால்" ஓபிஎஸ் தரப்பு சந்தோஷத்திலும்.. எடப்பாடி தரப்பு அதிருப்தியிலும் உள்ளது.

    English summary
    Why OPS is happy and EPS is not with the Election commission decision?தேர்தல் ஆணையம் இன்று நடத்தும் கூட்டத்திற்கு அதிமுகவின் இரு கோஷ்டிகளுக்கும் அழைப்பு சென்று இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X