லுலு மால் முழுக்க திடீரென எகிறிய கூட்டம்..மக்கள் அலைமோத இதுதான் காரணமா? மிஸ் பண்ணவே கூடாது
சென்னை: இப்போது எல்லா ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் மக்களை ஈர்க்க அதிரடி ஆஃபர்களை அள்ளி கொடுக்கின்றன, வாடிக்கையாளர்களை அதிகளவில் பொருட்களை வாங்க வைக்கவே இதுபோன்ற ஆஃபர்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கிடையே பிரபல லூலூ குழுமம் 50% சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மக்களை ஈர்க்க அவ்வப்போது ஆஃபர் சேல்களை அறிவித்து வருகின்றன. இதன் மூலம் விற்பனை கணிசமான அளவுக்கு அதிகரிக்கிறதாம். இதுபோன்ற அதிரடி சலுகைகளில் இப்போது கடைகளும் சேர்ந்துவிட்டன என்றே சொல்லலாம். பல்வேறு கடைகளும் அதரடி ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அதன்படி இப்போது லூலூ மாலிலும் அதிரடி சலுகையுடன் கூடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு
ஹைதராபாத் லூலூ மாலின் மெகா விற்பனையான "லூலூ ஆன் சேல்" இன்று ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை இந்த மெகா விற்பனை நடைபெற உள்ளது. இந்த விற்பனையில் கிட்டதட்ட அனைத்துப் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது குறித்து லூலூ மாலின் பொது மேலாளர் விமேஷ் கூறுகையில், "நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையில் லூலூ ஹைப்பர் மார்க்கெட், லூலூ ஃபேஷன் ஸ்டோர் மற்றும் லூலூ கனெக்ட் ஆகியவற்றில் 200க்கும் மேற்பட்ட பிரபலமான பிராண்டுகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் ஆடை, காலணி எனப் பல்வேறு பொருட்களில் பெரிய தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்" என்றார்.
நாள் முழுக்க
லூலூ கனெக்ட் டிவி, மொபைல்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மீது சிறப்புச் சலுகைகளை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. வழக்கமாக ஹைதராபாத்தில் இருக்கும் இந்த லூலூ மால் காலை 10 மணிக்குத் தான் திறக்கப்படும். ஆனால் சிறப்பு விற்பனை இருப்பதால் ஹைப்பர் மார்க்கெட்டை காலை 8 மணிக்குத் திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் நாள் முழுவதும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புட் கோர்ட்
இது குறித்து மால் மேலாளர் கூறுகையில், "பொருட்கள் மட்டுமின்றி புட் கோர்ட்டிலும் சலுகைகள் இருக்கும்.. புட் கோர்டில் மட்டும் 80க்கும் மேற்பட்ட கடைகள் இந்த விற்பனையில் பங்கேற்கின்றன. இந்த சீசன் இறுதி விற்பனை ஜூலை 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரீமியம் பிராண்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்" என்றார்.
குழந்தைகளுடன் வருவோரைக் கவர் செய்யவும் தனி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அங்குள்ள கேமிங் ஏரியாவான லூலூ ஃபன்டுராவில் குழந்தைகளைக் கவரச் சிறப்பு பேக்கேஜ்களையும் அறிவித்துள்ளனர்.
பைக், ஸ்கூட்டி
இது தொடர்பாக லூலூ குழுமத்தின் பிராந்திய இயக்குநர் அப்துல் காதர் ஷேக் மற்றும் பிராந்திய மேலாளர் முகமது ஷெரீப் ஆகியோர் கூறுகையில், "சலுகைகள் மட்டுமின்றி வேறு சில ஆச்சரியங்களும் இருக்கிறது. குறைந்தபட்சம் ₹1,999 செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு லக்கி டிரா மூலம் இரண்டு ஜாவா பைக்குகள், இரண்டு டிவிஎஸ் ஸ்கூட்டர்கள், தங்க நாணயங்கள் மற்றும் துபாய் செல்லும் வாய்ப்பு பரிசாக வழங்கப்படும்" என்றனர். இந்தச் சிறப்பு விற்பனை ஜூலை 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications