டாஸ்மாக் மதுவை விட கள்ளச்சாராயம் ஏன் ஆபத்து? உயிரை பறிக்கும் என தெரிந்தும் மக்கள் அதை குடிப்பது ஏன்?
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஐ தாண்டியுள்ளது.. டாஸ்மாக்கில் கிடைக்கும் மதுவை விட இந்த கள்ளச்சாராயம் ஏன் ரொம்ப ஆபத்தானது.. இது தெரிந்தும் ஏன் மக்கள் இதையே வாங்கி குடிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கும் திடீரென பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு: இதையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனில்லாமல் பலரும் உயிரிழந்தனர். இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போது அவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தளவுக்கு உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்த பிறகும்.. மக்கள் ஏன் கள்ளச்சாராயத்தைக் குடிக்கிறார்கள்.. என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மது நீண்ட கால நோக்கில் தான் உடலுக்கு ஆபத்தானது விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெளியே கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுவைக் குடித்தால் அது உடனடியாக உயிரைப் பறிக்கும் ஆபத்தும் அதிகமாகவே இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
ஆபத்து: முதலில் டாஸ்மாக்கில் உற்பத்தி செய்யப்படும் மது வகைகள் அனைத்தும் தொழிற்சாலையில் முறையாகத் தயாரிக்கப்படுபவை.. அவை தொடர்ச்சியாகத் தரச் சோதனைக்கு உட்படுத்தப்படும். ஆனால், இதுபோல உற்பத்தி செய்யப்படும் கள்ளச்சாராயத்தின் தரம் கேள்விக்குறி தான்.. அதன் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு சோதனையும் இல்லை என்பதே முதல் ஆபத்து.
மேலும், கள்ளச்சாராயத்தில் உயிருக்கு ஆபத்தான மெத்தனால் இருக்கும். இதன் அளவுக்குச் சற்று அதிகரித்தாலும் கூட அது மொத்தமாக உயிரைப் பறிக்கும். இப்போது கள்ளக்குறிச்சியில் அதுபோன்ற சம்பவம் தான் நடந்துள்ளது. அதில் மெத்தனால் அளவு அதிகமாக இருந்த நிலையில், அதுவே விஷமாக மாறி இருக்கிறது.. இதன் மெத்தனால் குடித்தால் கண்கள் குருடாகும் சம்பவமும் ஏற்படும்.
அதேபோல கள்ளச்சாராயத்தில் இருக்கும் மற்றொரு சிக்கல் அவை மிக ஈஸியாக மாசுபடும். இவை பெரும்பாலும் வீடுகள் அல்லது சுகாதாரம் இல்லாத இடங்களில் தான் தயாரிக்கப்படும். அப்போது எளிதாக இவை மாசுபடும். மேலும், கள்ளச்சாராயம் விரைவாக நொதிக்க வேண்டும் என்பதற்காக அதை உற்பத்தி செய்வோர் மிகவும் ஆபத்தான கெமிக்கல்களையும் அதில் சேர்க்கலாம். இவை உயிரிக்கு ரொம்பவே ஆபத்தாகும்.
கள்ளச்சாரத்தை குடிப்பது ஏன்: இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது என்று தெரிந்தும் சிலர் ஏன் கள்ளச்சாராயத்தைக் குடிக்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் விலை.. டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது வகைகளைக் காட்டிலும் இந்த கள்ளச்சாராயத்தின் விலை குறைவு. இதன் காரணமாகவே ஆபத்தானது என்று தெரிந்த போதிலும், சிலர் அதைத் தொடர்ந்து குடிக்கிறார்கள்.
அதேபோல தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக டாஸ்மாக் மதுவைக் குடிக்கும் போது அது போதையைத் தராது. இதன் காரணமாகவும் சிலர் டாஸ்மாக் மதுவை விட்டுவிட்டு கள்ளச்சாராயத்தைக் குடிப்பார்கள். டாஸ்மாக் மதுவுக்குப் பதிலாகக் கள்ளச்சாராயம் குடிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications