டார்கெட் மு.க. ஸ்டாலின் .. வட தமிழகத்தின் 80 தொகுதிகள்... ரஜினியுடன் பாமக கைகோர்ப்பதன் பின்னணி
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான களம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. பரம வைரிகளாக இருந்த ரஜினிகாந்தும் பாமகவும் இம்முறை கூட்டணி அமைப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த கூட்டணியின் பிரதான இலக்கே மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுப்பதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெறும் என்று அவரது ஆலோசகர்களில் ஒருவரான தமிழருவி மணியன் வெளிப்படையாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே என ரஜினிகாந்த் நடித்த பாபா படம் வெளியான போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முந்திரி காடுகளுக்குள் அப்படத்தின் பெட்டியை பாமகவினர் தூக்கிக் கொண்டு மறைத்து வைத்த சம்பவங்கள் நினைவுகூறப்பட்டு வருகின்றன.

ரஜினி குறித்து பாமக மவுனம்
பொதுமேடைகளில் ரஜினிகாந்தை ஒருமையில் பாமகவினர் விமர்சித்த காலங்களும் உண்டு. ஆனால் அண்மைக் காலமாக ரஜினிகாந்த் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசுகிற போதும் பாமக மவுனமாகவே அதை கடந்து சென்றது. குறிப்பாக தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறாக பேசிய போது பாமக எந்த எதிர்வினையையும் வெளிப்படுத்தவில்லை.ஆனால் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது அதை ஆவேசமாக கண்டித்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அப்போதே பாமகவின் இந்த மவுனம் குறித்து விவாதங்கள் எழுந்தன.

ரஜினிகாந்த் கூட்டணியில் பாமக
இந்நிலையில்தான் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று தமிழருவி மணியன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக ரஜினி மற்றும் பாமக வட்டாரங்களில் விசாரித்த போது, பாமகவைப் பொறுத்தவரை வட தமிழகத்தின் 120 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இருப்பினும் இங்குதான் திமுகவுக்கு கணிசமான இடங்களும் கிடைத்து வருகிறது.

திமுகதான் பிரதான இலக்கு
ரஜினிக்கு பாஜக தரப்பு கொடுக்கப்பட்ட பிரதான அசைன்மென்ட்டே திமுக வெல்லக் கூடாது; மு.க. ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்பதுதான். இதனையே பாமக தரப்பும் விரும்புகிறது. இருவருக்கும் பொது எதிரி திமுகவும் மு.கஸ்டாலினும். இதனால் இயல்பாகவே ரஜினியும் பாமகவும் இந்த புள்ளியில் இணைந்துள்ளனர்.

80 தொகுதிகளுக்கு குறி
பாமகவும் ரஜினிகாந்தும் இணைகின்ற போது வட தமிழகத்தின் சுமார் 80 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த 80-ம் கிடைக்காமல் போனாலும் திமுகவுக்கு போகக் கூடிய இடங்களை ஆகக் குறைந்தபட்சம் தடுத்துவிட முடியும் என்பதும் ஒரு கணக்கு. கொங்கு மண்டலத்தில் திமுகவை அதிமுக எதிர்கொள்ளும்; வட தமிழகத்தில் திமுகவை பாமக- ரஜினி அணி எதிர்கொள்ளும். எங்களது எல்லோரது இலக்கும் திமுக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் என விவரித்தனர். இதனால் தேர்தல் நேரத்தில் வடதமிழகத்தில் அதிருப்தியில் இருக்கும் சில திமுக மூத்த தலைவர்கள் ரஜினி அணிக்கு தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான வேலைகளும் கனகச்சிதமாக நடைபெறுகிறது என்றும் சிமிட்டுகின்றனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications