தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜிகே மூப்பனார்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: ராஜீவ்காந்தியால் Crisis Manager என்று அழைக்கப்பட்ட ஜிகே மூப்பனார் குறித்து தான் இன்றைய Throwback stories வரிசையில் பார்க்க இருக்கிறோம்.
பண்ணையார் வீட்டுப் பிள்ளை, பஞ்சாயத்தில் கெட்டிக்காரர், நன்றி மறக்காத நல் உள்ளம் கொண்டவர் என இவரை பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்தளவுக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் இவர் குறித்து இருக்கின்றன.

தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலத்தை சேர்ந்தவர் ஜிகே மூப்பனார். இவரது பூர்விக கிராமமான சுந்தரப் பெருமாள் கோவிலில் மூப்பனார் குடும்பத்தின் பெயரே பண்ணையார் குடும்பம் தான். அந்தளவுக்கு செழிசெழிப்பான குடும்பம் அவருடையது. கருப்பையா என்பது தான் இவர் பெயர் என்றாலும் அவரை பெயர் சொல்லி அழைப்பதை தவிர்ப்பதற்காக சொந்த கிராம மக்களால் மூப்பனார் என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் அதுவே அவரது அரசியல் பெயராகவும் மாறியது.

காமராஜர் கொடுத்த பதவி
ஜிகே மூப்பனாரை காமராஜரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார். தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஜிகே மூப்பனாரை நியமிக்க வேண்டும் என காமராஜரிடம் பரிந்துரை செய்தவரும் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் தான். அதையேற்று 1955ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜிகே மூப்பனார் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டிலேயே நம்பர் 1 மாவட்ட தலைவர் என காமராஜரிடம் பெயரெடுக்கும் அளவுக்கு கடுமையாக உழைத்து தஞ்சை மாவட்டத்தை காங்கிரஸ் கோட்டையாக மாற்றியவர்.

மாநில பதவி
ஜிகே மூப்பனாரின் உழைப்புக்கேற்ற பரிசாக அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினர் என்ற மாநில பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் அவர் திறம்பட செயலாற்றியதாலும் ஒரு வேலையை கொடுத்தால் அதை எப்பாடுபட்டாவது சின்சியராக முடிக்கும் திறன் இருந்ததாலும் காமராஜர் மறைவிற்கு பிறகு நடந்த இரு காங்கிரஸ் இணைப்பு மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை கொடுத்தார் இந்திராகாந்தி.

படிபடியாக உயர்வு
இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், மாநிங்களவை உறுப்பினர் விறுவிறு வளர்ச்சி கண்டார். டெல்லியில் தனக்கு கொடுக்கப்பட்ட வீட்டை கூட கட்சி அலுவலகத்திற்காக வழங்கிவிட்டு வெஸ்டர்ன் கோர்ட் விடுதியில் தங்கினார். காங்கிரஸ் கட்சியில் எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும், உட்கட்சி பனிப்போர் நடந்தாலும் பஞ்சாயத்து பேசுவதற்கு ஜிகே மூப்பனாரையே ராஜீவ் காந்தி அனுப்புவார். இன்னும் சொல்லப்போனால் ராஜீவ்காந்தியால் Crisis Manager என்று அழைக்கப்பட்ட ஜிகே மூப்பனார்.

உதவும் குணம்
அரசியலை பொறுத்தவரை யாரும் யாரையும் வளர்த்துவிட மாட்டார்கள். எங்கே நாளைக்கு தங்களுக்கே போட்டியாக வந்து நிற்பார்களோ என்பது தான் இதற்கு காரணம். ஆனால் ஜிகே மூப்பனார் அதற்கு விதி விலக்கானவர். எத்தனையோ பேரை அரசியலில் கை தூக்கிவிட்டு கரை சேர்த்திருக்கிறார். அது குறித்துச் சொன்னால் தனிக் கதையாகவே சொல்லலாம்.

தனிக்கட்சி
கடந்த 1996ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார். 20 எம்.பி.க்களை பெற்றார். அவர்கள் அனைவரையும் சோனியா காந்தியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அணிவகுத்து நிற்க வைத்து வாழ்த்து பெற வைத்தார். யாருக்கு வரும் இந்தக் குணம். கட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் ஒரு நாளும் சோனியா காந்திக்கு எதிராக இவர் செயல்பட்டதில்லை. அப்படியொரு நன்றி மறக்காத நல் மனிதர் என்ற பெயர் எடுத்தவர் ஜிகே மூப்பனார். தனிக்கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் இவர் காலமானதால் காங்கிரஸ் கட்சியோடு தமிழ் மாநில காங்கிரஸை இணைத்தார் ஜிகே வாசன். பின்னர் அவரே அதே பெயரில் தனிக்கட்சி தொடங்கி நடத்துவது தனிக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.
-
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications