’மாமன்னன்’ ரத்தினவேலை கொண்டாடி ’கழுவேர்த்தி மூர்க்கனை’ கடந்தால் நாலாபக்கமும் ‘நாங்குநேரி’கள்தான்!
சென்னை: "நாங்குநேரி" ஜாதிய வெறியாட்டத்தை முன்வைத்து அண்மைய தமிழ் சினிமாக்கள் மீது சரமாரியாக வீச்சரிவாள்கள் வீசப்பட்டு வருகின்றன. மாமன்னன் திரைப்படத்தின் ஜாதிவெறி கதாபாத்திரமான ரத்தினவேலுவை வகை வகையாக மீம்ஸ் போட்டு கொண்டாடித் திரிந்த தற்குறிகள்தான் "நாங்குநேரி" சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்கிற உண்மை புதைக்கப்பட்டுவிடக் கூடாது என்கின்றனர் சமூகவியலாளர்கள்.
நாங்குநேரியில் பச்சை பிள்ளைகளை படுபாதக ஜாதிவெறி அரிவாள்கள் பதம்பார்த்திருக்கின்றன. அதுவும் பிஞ்சு பிள்ளைகளின் கைகளிலேயே அரிவாள்களை எடுக்க வைத்து இந்த ஜாதிவெறியாட்டம் போடப்பட்டிருக்கிறது.

நாங்குநேரி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் அண்மையில் சமூக இழிவை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டி திரைப்படங்கள் எடுத்து வரும் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகிய இயக்குநர்களை குற்றவாளிக் கூண்டில் சகட்டுமேனிக்கு ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் அரசியல் தலைவர்கள்.
அண்மையில் வெளிவந்த மாமன்னன் படம்தான் இத்தனைக்கும் காரணம்; அதனை தடை செய்துவிட வேண்டும்; அந்த 2 இயக்குநர்களின் ஜாதியவெறிதான் இத்தனைக்கும் காரணம்; சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள்தான் வன்செயல்களுக்கு தூண்டுதலாக அமைந்துவிட்டன என்பதெல்லாம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இயக்குநர் கெளதமன், சசிகலா ஆகியோர் வெளியிட்ட, பயன்படுத்திய சொற்கள்தான். ஜாதியை கொண்டாடி பலநூறு தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்த போது இனித்துக் கொண்டிருந்ததாம்; ஜாதிய சிக்கல்களை அம்பலப்படுத்தி ஜாதியத்தின் கோரமுகத்தை துகிலிறித்து தொங்கவிடும் போது கசக்குதாம்; ரத்தவாடை வீசுதாம். இதுதான் இந்த தலைவர்கள் சொல்ல வரும் கருத்தும் உட்கிடக்கையும்!
இதே மாமன்னன் காலத்தில்தானே கழுவேர்த்தி மூர்க்கன் எனும் இன்னொரு ஜாதியம் குறித்து பேசிய படம் வந்தது. ஜாதிய திமிர் பிடித்த சமூகத்தை சேர்ந்த கழுவேர்த்தி மூர்க்கன், சொந்த ஜாதிக்கு எதிராக தலித்துகளுக்கு அரணாக நின்று ஜாதிவெறியர்களை கழுவிலேற்றியதைத்தானே அந்தப் படம் சொன்னது. ஏன் அப்படத்தை சோ கால்ட் தலைவர்கள் முன்னுதாரணமாக கொள்ளவில்லை.
மாமன்னன் படத்தின் ஜாதிவெறி கதாபாத்திரமான ரத்தினவேலுவை தங்களது சொந்த ஜாதிக்காரனைப் போல ரகம் ரகமாக பின்னணி பாடல் போட்டு கொண்டாடி வன்மத்தை பொதுவெளியில் வீசித் திரிந்தவர்கள்தானே நம்ம புள்ளைக.. நம்ம புள்ளைக ஜாதிவெறி எனும் மலத்தை வாயில் போட்டுக் கொள்வதைப் போல போட்டுத் திரிர்ந்த ரத்தினவேலு கொண்டாட்டங்களுக்கு இப்போது பேசுகிற ஒரே ஒரு ஜீவனாவது அடேய் முட்டாள்களே! இது ஆபத்தானது என எச்சரித்தது உண்டா? அந்த ரத்தினவேலு கொண்டாட்டங்கள்தானய்யா இப்போது நாங்குநேரிகளை விளைவித்திருக்கிறது.. மறுத்துவிட்டு ஓடிவிட முடியுமா?
மாமன்னனின் வடிவேலு பாத்திரத்தை கொண்டாட முடியாது; ரத்தினவேலுவைத்தான் கொண்டாட முடியும் என்கிற ஜாதிவெறி தலைக்கேறி கிடக்கும் சமூகத்தில் நாங்குநேரிகளைத் தவிர வேறு என்னத்தை எதிர்பார்த்துவிட முடியும்?

ஜாதியை விட்டொழி! 2,000 வருஷம் ஜாதியை விட்டொழி! என சாகும் வரை மூத்திரசட்டியை சுமந்து கொண்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஜாதி ஒழிப்புக்கு எதிராக பிரசாரம் செய்து இந்திய நிலத்தில் தமிழ்நிலத்தின் உன்னதத்துக்கு வித்திட்ட தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிக்கத்தான் போவோம் என கூப்பாடு போடுகிற கும்பல்கள் கூத்தாடுகிற வரை நாங்குநேரிகள் வளராமல் நாசா விண்வெளி மையங்களாக இங்கே வளர்ந்துவிடும்?
போய் புள்ளைகுட்டிகளை படிக்கவையுங்கடா என பேசிய வசனத்தை ரத்த சகதியில் புதைத்துவிட்டு போற்றிப் பாடடி பெண்ணே! என பாடி பாடி அடுத்த ஜாதியை சீண்டி சீண்டி சீழ்பிடித்து போன சமூகத்துக்குள் நாலா பக்கமும் நாங்குநேரிகள்தான் வளரும்! என்றைக்கு மாமன்னன் ரத்தினவேலுவை ஒழித்து கட்டி கழுவேர்த்தி மூர்க்கன்களாக ஒவ்வொரு இளைஞனும் ஜாதிய பிடிமானத்தில் இருந்து விடுபடுகிறானோ அன்றைக்கு நாங்குநேரிகள் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும்! கொண்டாடித் தீர்க்க தெரிந்தவர்களே! கொஞ்சம் சிந்திக்கத்தான் பாருங்களேன்!
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications