எந்த தேர்தலாக இருந்தாலும் தபால் வாக்குகளை முதலில் எண்ணுவது ஏன்? இத்தனை விஷயமிருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலாக இருந்தாலும் லோக்சபா தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் தபால் வாக்குகளை முதலில் எண்ணுவது ஏன்?

தபால் வாக்களிப்பு என்பது வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் தபால் மூலம் விநியோகிக்கப்படும். தேர்தல் நாளுக்கு முன்னதாக தபால் வாக்குகள் மீண்டும் அனுப்பப்பட வேண்டும்.

lok sabha election results 2024 postal votes tamil nadu 2024

ரயில்வே பணியாளர்கள், கப்பல் பணியாளர்கள், விமான பணியாளர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆகியோர் தபால் வாக்களிக்கலாம்.

எளிதில் தொடர்பு கொள்ள முடியாத பகுதிகளில் உள்ளவர்கள், வாக்குச் சீட்டை பெற்று அதில் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தங்களது வாக்குச் சீட்டை தபால் முறையில் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கும் முறைதான் தபால் ஓட்டு.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற சபாநாயகர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இந்த முறையில் விரும்பினால் வாக்களிக்க அவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தர வேண்டும்.

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களால் தேர்தல் நாள் அன்று அவர்களது வாக்கை செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதற்காக மத்திய சட்டத் துறை அமைச்சகம், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இதற்கு தீர்வு காண முயற்சித்தது. இந்த துறையில் உள்ள மக்கள், தற்போது தபால் மூலம் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பத்துடன் தேர்தல் பணியாளர்கள் வீடு தேடி வருவார்கள். தபால் ஓட்டு போடுவதற்கான ஒப்புதலை பெற்றுச் செல்வார்கள். தேர்தல் நடத்தும் அலுவலர், விண்ணப்பத்தை பரிசீலித்து, தபால் ஓட்டு போட அனுமதி வழங்குவார்.

தபால் ஓட்டு போடலாம் என்ற தகவல் உரிய விண்ணப்பதாரருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போடும் முறைகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள். தபால் மூலம் வாக்குச் சீட்டை பெற்றவர்கள், அதில் உள்ள வேட்பாளர்களில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டிக்ளரேஷன் ஃபார்மை பூர்த்தி செய்து அதை சீலிடப்பட்ட கவரில் இணைத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தபால் ஓட்டு பதிவு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். தேர்தல் பணியாளர்கள் வரும் போது வாக்காளர் வீட்டில் இல்லாவிட்டால் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் இரண்டாவது முறை வருகை தருவார்கள். அப்போதும் வீட்டில் இல்லை என்றால் மீண்டும் வரமாட்டார்கள். தபால் ஓட்டு அளிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் ஓட்டுச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது.

தபால் வாக்குகளை முதலில் எண்ணுவது ஏன்: எந்த தேர்தலாக இருந்தாலும் தபால் வாக்குகளைத்தான் முதலில் எண்ணுவார்கள். இதற்கு காரணம், வாக்கு பதிவு இயந்திரத்தில் ஒரு பட்டனை தட்டினால் எத்தனை வாக்குகள் என வந்துவிடும். ஆனால் தபால் ஓட்டுக்கள் அப்படியல்ல!

தபால் வாக்குகளில் கையெழுத்து சரியாக இருக்கிறதா, எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்து எண்ண வேண்டும். இதை தேர்தல் அதிகாரிகள் கவனமாக கையாள்வர். இந்த தபால் வாக்குகளை கடைசி நேரத்தில் எண்ணினால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கும் போது அதில் ஏதாவது குழப்பங்கள் நேர்ந்து விடும் என்பதற்காகவே தபால் ஓட்டுக்களை முதலில் எண்ணிவிடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+